செய்திகள்தமிழகம்

ரூ.1000 நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

மதுரையில் பொதுமக்கள் பகுதி உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார். அந்த ஆலோசனைக்கு பின்பு பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவை, பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் நோய் தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல் படுத்தியது போல் இன்று அதிகாலை முதல் ஜூன் 30 ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணி வரை ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்த ஆணை பிறப்பித்ததாக அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களின் சிரமங்களைக் குறைக்க, சென்னையில் வழங்கியது போல் ஊரடங்கு அமல் படுத்தப்படும். பகுதிகளிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க, அதை செயல்படுத்தும் விதமாக ஜூன் 27ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இருப்பிடத்திற்கே சென்று தக்க நிவாரணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இறுதியாக முதல்வர் தன்னுடைய உரையில் நாளை முதல் 30ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 30ம் தேதி வரை மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் ஈ பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்.

பொதுமக்கள் மதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *