பாம்பு பிடி மன்னன் உடல் நிலையில் முன்னேற்றம்…!
கேரளாவில் பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் கோட்டயத்தில் திங்கள்கிழமை நாகப்பாம்பு ஒன்று தொடையில் கடித்தது.இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலில், பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வென்டிலேட்டர் இல்லாமல் சுயமாக சுவாசிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அழைப்புகளுக்கு பதிலளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் இன்னும் சில காலம் வென்டிலேட்டரில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் “செவ்வாய்க்கிழமை காலை முதல் அவர் சுயமாக சுவாசித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், வென்டிலேட்டர் ஆதரவைப் பயன்படுத்தி சுவாசம் கண்காணிக்கப்படுகிறது. இது நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதைக் குறிக்கிறது” என்று மருத்துவர் கூறினார். மூளைக்கு இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.