அழகை மேம்படுத்த சில ஆரோக்கிய டிப்ஸ்-1
ஆதி முதல் இன்று வரை பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்வதோடு, சமையலையும், வீட்டு வேலைகளையும் மட்டுமல்லாமல், இன்றைய மகளிர் வேலைகளுக்கும் செல்வதால் தனக்கென்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, தன் அழகையும் மேம்படுத்த உங்களுக்காக சில ஆரோக்கிய டிப்ஸ் வழங்கியுள்ளது.
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்து வேலை செய்பவர்கள் வேலையை முடித்ததும் கைகளுக்கும் மாய்ஸ்சுரைசர் க்ரீம் தடவிக்கொள்ள வேண்டும்.
நன்கு கனிந்த பூவன் பழத்தை மசித்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு மெல்லிய துணியால் கட்டிக் கொண்டு சிறிது நேரத்திற்கு அப்படியே படுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் கண்கள் இளமையுடனும், பொலிவுடனும் காணப்படும். கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் தெரியும் கோடுகளையும், தழும்புகளையும், மறைக்க நல்லெண்ணெய் சிறிது மஞ்சள் தூள் கலந்து ஒரு மாதம் வரை குளிக்கும் முன்பு தேய்த்து குளித்து வந்தால், நாளடைவில் மறைந்து விடும்.
பாதங்களில் வெடிப்புகள் அதிகமாக இருந்தால் வாரம் ஒருமுறை பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டும்.
அடிக்கடி மருதாணி போடுவது பாதிப்புகளை நீக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.
இரவில் தினமும் கண்களுக்கு ஒவ்வொரு துளி விட்டுக் கொண்டு வருவதால் கண்கள் பிரகாசமாக தெரிவது நன்றாக தூக்கம் வரும்.
பாதாம் பருப்பை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து பாலில் கலந்து சிறிதளவு முகத்திற்கு தடவி கொண்டு வரவும். இதை உள்ளுக்குள் குடிக்கலாம் சருமம் நல்ல ஊட்டம் பெறுவதுடன் முதுமையை தள்ளிப் போடுவதற்கு இது பெரும் துணையாக இருக்கும்.
வயதாக வயதாக சருமத்திற்கு சோப்பு உபயோகிப்பதை குறைத்துக்கொண்டு பாசிப்பயறு, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு ஆகிய அனைத்தையும் காயவைத்து அரைத்த பொடியை உபயோகித்து வர சரும நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், பாசிபருப்பு மாவை கலந்து பேக் மாதிரி தலையில் தடவி ஊற வைத்து குளித்து வரலாம். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.
வில்வம் மரப்பட்டையை சந்தனக்கல்லில் இழைத்து அதை பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் அரிப்பு நீங்க தடவி வரவும்.
துளசி இலைகளை கசக்கி சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி ஊறிய பின் குளித்து வந்தால் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜியை சரி செய்யலாம்.
கடலை மாவுடன் தயிர் கலந்து வைத்துக்கொண்டு உடல் முழுவதும் தடவி காயவிட்டு குளிப்பதால் சருமம் பட்டுப்போல மாறும். சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இது பலனைத்தரும்.
ஆரஞ்சு தோலை காய வைத்து பயித்தம் பயிறு மாவுடன் கலந்து தேய்த்து குளித்து வருவதால் முகத்தில் எண்ணெய் அதிகம் வராமல் இருப்பதுடன் சருமம் பொலிவு பெறும்.
கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு, வெற்றிலை சாறு, ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சமமாக கலந்து இடுப்பிலும், கழுத்திலும் கருந்திட்டுக்கள் உள்ள இடங்களை தடவிக்கொண்டு, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்து வருவதால், அந்த இடங்களில் உள்ள கருமைகள் மறைவதுடன் ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.