அழகை மேம்படுத்தணுமா…?? இதோ உங்களுக்காக..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப அழகு என்பது நம் உள்ளத்தின் வெளிப்பாடு ஆகும். கறுப்போ, சிவப்போ கலர் முக்கியமல்ல லக்ஷணம் மிகவும் அவசியம். நாம் எப்படி இருந்தாலும் நம் உள்ள தூய்மையும், செயலும் தான் ஒருவரின் அழகை வெளிப்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. வெயிலில் சுற்றி களைப்பாக இல்லாமல், நம் வெளிதோற்றத்தை மெருகேத்த உங்களுக்கான சில குறிப்புக்கள் இதோ…
அழகுக்காக எல்லா கிரீம் உபயோகபடுத்தி நம் தோலின் அலர்ஜி ஆகாமல் இயற்கையாக கிடைக்கும் பூக்களை கொண்டு எப்படி அழகு படுத்தலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.
தோல் மென்மையாக
பாதம் சிறிது ஊறவைத்து இதனுடன் செம்பருத்தி பூ சேர்த்து அரைத்து வெயில்படும் இடத்தில் பூசி காயவைத்து கழுவ தோல் மென்மையாகும். இதை அரைத்து பிரிட்ஜ்ல் வைத்து 2 நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். பாதம் 10 , செம்பருத்தி 15 பூ ஊறவைத்து அரைத்தால் முகம் மற்றும் கழுத்து பகுதிக்கு உபயோகபடுத்த போதுமானது. தேவையான போது மட்டும் அரைத்து வாரத்திற்கு ஒரு முறை போடலாம்.
தோல் நிறம் மாற
சந்தன தூளுடன், மரிக்கொழுந்து சாறு எடுத்து கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். இதனால் முகத்தில் உள்ள கருமை போவதுடன் நிறமும் மாறும். இதை வரம் இருமுறை செய்து வந்தால் நல்ல மற்றம் தெரியும்.
முகம் பொலிவு பெற
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணிரை நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இந்த தண்ணீரில் 100 கிராம் சாமந்தி பூக்களில் இதழை மட்டும் முழுவதுமாக சூடு நீரில் போட்டு பாத்திரத்தை மூடிவைக்கவும். இதை இரவு முழுதும் ஊற வைத்து மறுநாள் காலை நீரை மட்டும் வடித்து எடுத்து வைத்து கொள்ளவும். பிரிட்ஜ்ல் வைத்தால் இரண்டு நாட்கள் வரும். தினமும் காலை இந்த நீரால் முகத்தை கழுவி வருவதால் முகம் பொலிவாக இருக்கும்.
சரும பிரச்சனைக்கு
சரும பிரச்சனைக்கு மகிழம்பூ தீர்வாகும். இதை எங்கு பார்த்தாலும் வாங்கியோ, பறித்தோ வைத்து விடுங்கள். இந்த பூவின் இதழை மட்டும் எடுத்து கழுவி சிறிது நேரம் ஊற வைத்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, இதை பூசி ஊற விட்டு குளித்து வர சரும பிரச்னை மற்றும் வியர்வையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சரும பொலிவுக்கு
பாலுடன் தாமரை இதழ்களை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர சருமம் மென்மை ஆகும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். முகத்தில் கரும் புள்ளிகள் நீங்கி, முகத்தில் பருக்களை போக்கி பளபளப்பாக இருக்க பன்னீர் ரோஜா இதழ், சிறிது வேப்பிலை சேர்த்து அரைத்து இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வருவதால் மற்றம் தெரியும். இதை போடும் போது கண்களுக்கு பன்னீர் நினைத்த பஞ்சை வைத்து கொள்ள கண்கள் குளிர்ச்சி ஆகும்.
எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு மாற்றம் தெரியவில்லை என்று கவலை படுபவர்கள் இதை முயற்சி செய்யலாம். பார்லர் போய் உங்கள் பணத்தை செலவு செய்து இயற்கை தன்மையை போக்காமல், இயற்கையான பூக்களின் இதழ்களை வைத்து உங்கள் அழகை வீட்டிலே மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க
Pingback: பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?? மகளிற்காக..!! | SlateKuchi