அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

அழகை மேம்படுத்த சில ஆரோக்கிய டிப்ஸ்-2

இன்றைய மகளிர் வேலைகளுக்கும் செல்வதால் தனக்கென்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு, தன் அழகையும் மேம்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ் சென்ற பதிவின் தொடர்ச்சி.

இலுப்பை இலைகளை நீரில் போட்டு வேக வைத்து வெந்ததும் மையாக அரைத்து உடல் முழுவதும் தடவிக் கொண்டு குளித்தால் தேமல் மறைந்து விடும்.

தினமும் மார்பகங்களுக்கும் மஞ்சள் பூசிக் குளிப்பது மிகவும் நல்லது. அது மார்பகங்களை தொற்றுக்கிருமிகள் எதுவும் தாக்காமலும், தொய்வடைந்து போகாமலும் பாதுகாக்கும்.

வெள்ளை கசகசாவை பாலில் ஊறவைத்து மிளகு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலையை அலசினால் பொடுகு மறையும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படிச் செய்துவர பொடுகு தொல்லை ஒழியும்.

முகத்தில் தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி ஊறி குளித்து வந்தால் இளமை நீடிக்கும்.

குப்பைமேனி இலை கொழுந்து, வேப்பிலை, மஞ்சள் மூன்றையும் விழுதாக அரைத்து சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் இதைத் தடவி காய விட்டு மறுநாள் காலை பிடித்து விடுவதால் அநாவசிய ரோமங்கள் உதிர்ந்து விடும்.

குளித்து முடித்ததும் உள்பகுதியில் படிகாரத்தை தேய்த்துக்கொண்டு அதன் மேல் ஆடைகளை அணிந்து கொண்டால் வியர்வை நாற்றம் இன்று உடல் புத்துணர்வோடு இருக்கும்.

வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு வைத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், சரும பிரச்சனைகளும் வேப்ப இலைகளை காயவைத்து பொடித்து, மஞ்சள் தூளுடன் கலந்து குளித்து வந்தால் சரும வியாதிகள் அண்டாது.

மஞ்சள் பொடி, விளக்கெண்ணெய், வாதமடக்கி இலைச்சாறு, மருள் இலைச்சாறு, கலந்து வைத்து தினமும் காலில் தடவி வருவதால் பாத வெடிப்புகள் மறையும்.

வெந்தயம், கறிவேப்பிலை இரண்டையும் ஊற வைத்து அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பின்பு குளித்தால், கூந்தல் உதிர்வது நின்று செழிப்பாக வளரும்.

தினசரி குறைந்தது கால் பாதங்களை மசாஜ் செய்து விட்டு இரண்டு கப் தண்ணீரை அவற்றின் மேல் விடவும். தினமும் இப்படி செய்து வந்தால் பாதங்கள் மென்மை அடையும். ஒரு பெரிய வெங்காயத்தை வதக்கி அரைத்து அதன் விழுதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்புகள் மறைந்து மென்மையாகும்.

2 டேபிள்ஸ்பூன் கடுகு எண்ணெய், 50 கிராம் வாக்ஸ் கலந்து பாதங்களில் தடவி, காலையில் கழுவி சுத்தப்படுத்த பித்த வெடிப்புகள் மறைந்து விடும். ஒரு மெல்லிய துணியில் ஐஸ் கட்டிகளை கட்டி முகம் மற்றும் கழுத்தில் லேசாக வைத்து தேய்க்க கண்கள் மற்றும் முகத்தின் தசைகளின் இறுக்கம் குறையும்.

வெந்தய பவுடருடன், மஞ்சள்தூள், பச்சை பயிறு மாவை கலந்து, முகத்தில் தேவையற்ற ரோமங்கள் இருக்கும். அந்த இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர அவை உதிர்ந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *