ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஒரு மனிதனுக்கு இது இருந்தா போதும் .. வேற எதுமே வேண்டாம்

ஒரு மனிதன் சுறுசுறுப்பாகவும் பலமாகவும் இருந்தாலே போதும் அவன் அன்றாட வேலைகளை எளிதில் முடித்து வாழ்வில் முன்னேற முடியும். எந்த ஒரு செயலையும் அசாதாரணமாக செய்யும் திறன் அவனுக்கு வந்து விடும்.. நிறையப்பேர் இப்பல்லாம் நான் எல்லாம் செய்யணும்னு மனதளவில் நினைக்கிறேன் ஆனா அந்த செயலை செய்ய என் உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது .எப்ப பாத்தாலும் சோர்வு மற்றும் தூக்கம் மட்டும்தான் என் கூடவே இருக்கு. அதனாலேயே எல்லாரும் என்ன சோம்பேறி இவனால எதையும் செய்ய முடியாது அப்படின்னு சொல்றது உண்டு.

இனிமேல் இந்த கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம் கீழே கூறியுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொண்டாலே உங்கள் கவலைகள் நீங்கி தினமும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்… நம் உடலில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் இருந்தாலே சோம்பல் வராது…

இரும்புச் சத்தின் அவசியம்

இரும்புச் சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வதால் ரத்தசோகை நோயை குணப்படுத்தலாம். காற்றில் உள்ள ஆக்சிஜனை நமது உடலுக்கு எடுத்துச் செல்ல மிகவும் உதவியாக உள்ளது இரும்புச் சத்துதான். இரும்புச்சத்து குறைவாக உள்ள போது நகங்கள் வெளுத்து காணப்படுவது, அதிக சோர்வு, பசியின்மை ,பதற்றம், எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் ,எரிச்சல் போன்றவை ஏற்படும். இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்கள் மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் என அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள்

ஈரல் (இரும்புச்சத்து மட்டுமல்ல விட்டமின் ஏ, விட்டமின் பி12 ,போலிக் ஆசிட் ஆகியவையும் அதிகம் உள்ளது)

பீன்ஸ் வகைகள் ( சோயா பீன்ஸ் , கொண்டைக் கடலை போன்றவை )

கீரை வகைகள்(முக்கியமாக முருங்கைக்கீரை எடுத்துக் கொள்வது மிக நல்லது)

பீட்ரூட் ( இதில் விட்டமின் சி ஆகியவையும் நிறைந்து உள்ளது)

மீன் (குறிப்பாக மத்தி மீனில் அதிக இரும்புச்சத்து உள்ளது)

பழ வகைகள் ( குறிப்பாக மாதுளை மற்றும் ஆப்பிள்)

பூசணி விதை (இதில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது)

நட்ஸ் வகைகள் ( குறிப்பாக பாதாம் மற்றும் வேர்க்கடலை)

உலர் திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் ( இதில் கால்சியம் மெக்னீசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *