ஆவணி மாதத்தின் சிறப்பு விசேஷங்கள்
ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை ஆவணி மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆவணி மாதம் என்றழைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தியை போற்றும் திருவோணம், விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விசேஷங்கள் ஆவணிமாத விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
மகா சங்கடஹர சதுர்த்தி
ஆனால் இந்த வருடத்தில் கிருஷ்ண ஜெயந்தி மட்டும் ஆடிமாதம் கடைசி வாரத்தில் வந்துள்ளன. மகா சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் போது வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. கணபதி விரதம் இருந்து வழிபட உகந்த நாள் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி. மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம்.
இந்த நாளில் இன்று கணபதியை வழிபட்டு சந்திர தரிசனம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து நன்மைகள் சேரும் என்பது ஐதீகம். ஆவணி மாதத்தில் வரும் ஏகாதசி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலை வழிபட உகந்த நாள் ஏகாதசி ஆகும். இன்றைய தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆவணி அமாவாசை
ஆவணி அமாவாசை பித்ரு பூஜை செய்து முன்னோர்களின் ஆசியைப் பெற உகந்த தினம். ஆவணி அமாவாசை இந்நாளில் தீர்த்தமாடி முன்னோர்களுக்கான பூஜை செய்து வழிபட்டு வருவதால் முன்னோர்களின் அருளும், நன்மைகளும் கிடைக்கும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகர் அருள் பெற்று அனைத்து நலன்களையும், செல்வங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடையூறு இருக்காது. ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை திருவோணம். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்குவதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த நாள். மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்று மக்கள் கொண்டாடும் நாளாக ஓணம் பண்டிகை அமைகிறது.
ஆவணி பௌர்ணமி
ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி இறைவழிபாடு செய்வதற்கு மிகச் சிறந்த நாள். பௌர்ணமி தினம் அன்று விரதமிருந்து சிவ வழிபாடு செய்து கிரிவலம் மேற்கொள்வதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.