ஆன்மிகம்ஆலோசனை

வருடத்தில் முக்கியமான கிருத்திகை விரதங்கள்

மனத்தூய்மைகாகவும் மனம் ஒருமைக்கும் வழி செய்யும் விரதங்களை கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள் அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில் பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் இவற்றிற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்கு உரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவது முக்கியமாகக் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

வருடத்திற்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெற்றவை. அவை உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை. கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகை கடவுளுக்கு உகந்த நாட்கள்.

ஆடிக் கிருத்திகையில் விரதமிருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். தை மாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

முருகனுக்கு உகந்த விரதங்களில் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *