ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

ஆடி பதினெட்டாம் நாளை சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.

ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆடி பதினெட்டு தமிழர்கள் திருநாளில் இதுவும் ஒன்றாக விமர்சையாக கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் எங்கும் செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே எளிமையாக கொண்டாட முடியும்.

ஆடி பதினெட்டு கோவில்களில் உள்ள நதிக்கரைகளில் நீராடி, காப்பரிசி தயார் செய்து தெய்வங்களுக்கு படைத்து, பலவித கலவை சாதங்களை உற்றார், உறவினர்களுடன் நதிக்கரையில் அமர்ந்து சாப்பிட்டு விவசாயம் செழித்து வளர்வதற்கு வேண்டிக் கொள்ளும் சிறப்பு அம்சமே.

புதிதாக விதை விதைப்பதால் விவசாயம் செழித்து தைமாதத்தில் நல்ல படியாக அறுவடை செய்ய வேண்டி இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் தங்கம், வெள்ளி, நகைகள் வாங்குவதால் பல மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாதவர்கள்.

வீட்டில் வறுமை ஏற்படாமல் இருப்பதற்காக அரிசி, பருப்பு ,உப்பு, மஞ்சள், சர்க்கரை போன்ற பொருட்கள் வாங்குவது நல்லது. இதனால் நம் வீட்டில் என்றும் பஞ்சம் ஏற்படாமல் உணவு தானியங்கள் பல்கிப் பெருகி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். ஆடி பதினெட்டில் விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.

ஆடி பதினெட்டாம் நாள் தாலி கயிறு மாற்றுவது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. புதிதாக தாலி கயிறு மாற்ற விரும்புபவர்கள் இந்த நாளில் மாற்றிக்கொள்வது மாங்கல்ய பலத்தை தரும். காவிரி ஆற்றை சிறப்பிக்கும் வகையில் தொன்றுதொட்டு இந்த விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மா மண்டபம் படித்துறையில் பெருமாளுக்கு சீதனம் அளிப்பதற்காக பட்டுச்சேலை, தாலிக்கயிறு, இதர மங்கல பொருட்கள் அனைத்தும் செய்து ஆற்றில் விடுவது வழக்கம்.

வீட்டில் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி, நெய் அகல் தீபம் ஒன்றை இலையில் வைத்து ஏற்ற வேண்டும். பின் தூப தீபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் குடும்ப நன்மைக்காக வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டு கணவர் கையால் தாலி சரடை மாட்டி கொள்ள வேண்டும்.

பின் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலவை சாதத்தையும், காப்பரிசி பிரசாதத்தையும் உண்ண வேண்டும். ஆடி பதினெட்டாம் நாள் வழிபாடு செய்பவர்களுக்கு தங்குதடையின்றி வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீங்களும் இந்த வழிபாட்டை செய்து ஆடி பதினெட்டாம் நாளை சிறப்புடன் கொண்டாட வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *