அன்பும் உறவும்வாழ்க்கை முறை

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான் சிலேட் குச்சியின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான். சிலேட் குச்சியின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்புகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நட்பை மதித்து கொண்டாடப்படுவது பிரண்ட்ஷிப் டே.

நட்பு என்பது அறியாத வயதில் பள்ளியில் தொடங்கி கல்லூரி வரையிலும் தொடரும். அதுமட்டுமல்லாமல் படிப்பு முடித்து அலுவலகம் செல்லும் போதும் வெளி உலகம் முதல் தற்போது சோசியல் மீடியா வரை நட்பு வட்டம் வளர்ந்து வருகின்றன.

சிறு வயது முதல் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை இருந்த நட்பை யாராலும் மறக்க முடியாத அனுபவமாகத் தான் ஒவ்வொருவருக்கும் அமைந்திருக்கும். வெகு நாட்கள் கழித்து பள்ளி நட்பை சந்திக்கப் போகிறோம் என்றால் அதைவிட மகிழ்ச்சி எதுவும் இருக்காது.

பள்ளிப்பருவத்தில் நண்பர்களுடன், தோழிகளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், சேட்டைகளும் விலைமதிப்பற்ற தாக இருக்கும். இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் விளையாட்டுகளும், சேட்டைகளும் மறைந்து வருகின்றன.

இவையெல்லாம் நம் தலைமுறைக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் வரலாறாக இருக்கிறது. நம் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் நம்முடைய சில பிரச்சனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வதற்கு நட்பு அவசியம்.

நீங்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவதும். நீங்கள் சோகமாக இருக்கும் போது அதை பார்த்து வருத்தப்படுவதும் நல்ல நட்பாக இருக்கும். தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்வதும் நட்பு தான். அவ்வப்போது கலாய்ப்பதும். மற்றவர்கள் முன்னாடி விட்டுக்கொடுக்காமல் பேசுவது நட்பு தான்.

ஒவ்வொருவருக்கும் கஷ்ட காலத்தில் துணை நிற்க உண்மையாக ஒரு நண்பன் ஆவது இருக்க வேண்டும் என்பது பழமொழி. இதற்காகவே அக்காலத்தில் திருவள்ளுவர் தனது குரலில் நட்புக் என்றே ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார். நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினமாக தான் இருக்கும்.

நட்பு சாதி, மதம் வேதத்தை கடந்து ஆண், பெண் தெரியாது. ரத்தத்தையும், பணத்தையும் பார்க்கத் தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு கிடைக்கும் மதிப்பு மிகப் பெரியது. நட்பு என்பது நம்மை ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவாகும்.

இப்படிப்பட்ட நட்பு உங்களுக்கு கிடைத்து இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இன்றைய சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் கஷ்ட காலத்தில் துணை நிற்க உண்மையான ஒரு நண்பர்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *