சத்தான சரிவிகித உணவுகள் இன்றி
நம் அரசு கொரோனாவை ஒடுக்குவதில் காட்டும் அதே முனைப்பை இது போன்ற சமூக பாதுகாப்பு திட்டம் செம்மையாக செயல்படுத்த காட்டலாம்.
இதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வியும், போதுமான சத்துணவு கிடைப்பதை உறுதி செய்வதில் இன்னும் மேலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் நம் அரசு.
ஆனால் அங்கன்வாடி மையங்கள் முற்றிலுமாக செயலிழக்கபட்டு மூடப்பட்டுள்ளன. இதன் விளைவால் லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களின் வளர்ச்சிக்கு மற்றும் கல்வி கற்கும் வாய்ப்பையும், வாழும் உரிமையையும் இழந்து வருகிறார்கள்.
இது போன்ற ஆபத்து நேர்ந்துள்ளது. நிறைய குழந்தைகளுக்கு நம்மை உலுக்கி போடும். இன்னொரு புள்ளி விவரங்கள் என்ன வென்றால் 2 கோடி 80 லட்சம் குழந்தைகள் பள்ளி கல்வியை தொடங்கும் முன்னரே அங்கன் வாடி மையத்தில் பயின்றனர்.
ஒன்றிணைக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மேம்பட்டு சேவையை குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காகவும் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டதே இந்த அங்கன் வாடிகள் ஆகும்.
யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பாதிப்புகளால் சத்தான சரிவிகித உணவுகள் இன்றி குழந்தைகள் எளிதாக கிடைக்கப் பெறுவது தடையாக உள்ளது.
நம் நாட்டில் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட பல லட்சம் குழந்தைகள் அதிகமா சத்தான உணவுகள் இல்லாமல் வளர்ச்சியில் மற்றும் உடல் உறுப்பு வளர்ச்சி குறைவினாலும், பாதிக்கப்பட்டு பின்தங்கி இருக்கின்றனர்.
கண்ணுக்கே தெரியாத வைரஸ் கொரோனா கண்ணுக்கு தெரிந்த அத்தனை மனிதரையும் ரத்த கண்ணீர் விட வழிவகுக்கிறது. சத்தமே இல்லாமல் இன்னொரு பக்கம் குழந்தைகளையும் குறி வைத்து கொண்டிருப்பது தான் அதிர்ச்சி.
இந்த குழந்தைகள் மீது அக்கறை செலுத்துவது அவசியமாகும். இவற்றிற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு மிகச் சரியான பாதுகாப்பை வழங்க வேண்டும்.