நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா இத சாப்பிடுங்க
நாம் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க தொடர்ந்து இந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட் உணவில் சேர்த்துக் கொள்வதால் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, நியாசின், போலேட், பான்டோதெனிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், செலினியம், பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன.
கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலில் இருந்து பித்தம் மற்றும் கொழுப்பை குறைக்கின்றன.
ஆப்பிள் உணவில் எடுத்துக்கொள்வதால் வைட்டமின் ஏ, பி1, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து மிகுந்துள்ளன. பித்த உற்பத்தியைத் தூண்டும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வைட்டமின் சி இதில் இருக்கின்றன. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆக்சிஜனேற்றம் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இவைகள் நிறத்தைக் கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் கட்டுப்படுத்துகின்றன. கல்லீரலை பாதுகாக்கின்றன. ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் சேர்ந்த இந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கல்லீரல், சிறுநீரகம், குடல் மற்றும் தோலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. புத்துணர்வுடனும் இருக்கலாம்.