தளபதியின் மாஸ்டர் ஓடிடியா? திரையரங்கா?
இளையதளபதி விஜயின் மாஸ் படமான மாஸ்டருக்காக காத்திருக்கிறீர்களா! இது தற்போதைய அப்டேட்.
பொன்மகள் வந்தாள் பென்குயின் போன்ற படங்கள் அமேசான் பிரைமில் வெளிவந்தது போல் மாஸ்டர் படமும் வெளிவரப் போகிறது என்ற செய்தி பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக கூறுவதாகவும் கூறி வருகின்றனர்.
சூரியா அபர்ணா பாலமுரளி நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ. ரணசிங்கம் ஆகிய இரு படங்களும் ஓடிடியில் ரிலீஸாகப்போகிறது. சூரரைப் போற்று படக்குழுவினர் அமேசான் ப்ரைமுடன் கைகோர்த்து அக்டோபர் 30ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகின்றனர்.
க/பெ. ரணசிங்கம் ஐந்து மொழியில் ஜியில் ஓடிடியில் வெளியாக உள்ளது. 10 வெளிநாட்டு மொழிகளில் சப்டைட்டில்ஸுடன் 150 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடப் போகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீடு மாபெரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓடிடி ரிலீஸ் பட்டியலில் இளைய தளபதி விஜயின் மாஸ்டர் படமும் சேரப் போகிறது என்ற செய்தி பரவி வருகிறது. மாஸ்டர் படத்தின் குழுவினர் அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் வந்த இந்த தகவலை நிராகரிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் குழுவினர் ‘முன்பு கூறியது போல் திரையரங்குகள் திறந்த பின்னரே மாஸ்டர் படம் வெளியாகும்’ என்று மேற்கூறிய செய்தி வதந்தியே என உறுதி செய்துள்ளனர்.
திரையரங்குகள் திறந்தவுடனே மாஸ்டர் படம் வெளியாகும் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். ஆக திரையரங்கில் பொங்களுக்கு முன்னரே திறந்தாலும் கூடிய விரைவில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
மாஸ்டர் படம் பொங்களுக்காக காத்திராமல் திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருக்கிறது. தீபாவளியா பொங்களா! என்ற கேள்வி மாறி ஓடிடியா திரையரங்கா! என்றும் நிலமை நிலவி வருகிறது.