செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

தீபாவளி 2023 கோவையில் பட்டாசு வாங்கினால் பைக், எல்இடி டிவி,வெள்ளி நாணயம் பரிசு;கோவையை கலக்கும் புது பட்டாசு கடை

கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில் பட்டாசுகள் வாங்கினால், குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம், எல்இடி டிவி, மிக்சி வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுகளை அறிவித்துள்ள மதர்ஸ் பிராண்ட் பட்டாசு கடை பொதுமக்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது.

கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில், பழைய காளிதாஸ் திரையரங்கம் அருகில், சிவகாசி உற்பத்தியாளர்களின், நேரடி விற்பனையாக மதர் ப்ராண்ட் பட்டாசுகள் எனும் கடை, தீபாவளிக்காக இயங்கி வருகின்றது. தீபாவளி நாளில் பொதுமக்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் பல்வேறு பரிசுமழை களை அறிமுகம் செய்துள்ளது. 2500க்கும், அதிகமாக பட்டாசுகள் வாங்கும் அனைவரின் செல்போன்களை குலுக்கல் சீட்டுகளில் பதிவு செய்து வாடிக்கையாளர்களிடம் வழங்குகின்றனர்.

இவ்வாறு வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற 13ம்தேதி பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக இரு ச‌க்கர வானமும், இரண்டாம் பரிசாக எல்இடி டிவி, மூன்றாம் பரிசாக மிக்சியும் ஆதரவு பரிசாக, 10 நபர்களுக்கு 5கிராம் வெள்ளி நாணயம் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இது குறித்து கடையின் உரிமையாளர், ஆறுச்சாமி செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, தீபாவளி என்பது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விழா, இதனை இரட்டிப்பு மகிழ்ச்சியாக மாற்றும் வகையில் இங்கு பல பரிசு மழையை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது, மேலும் பரிசுகளை பெறும் பொழுது வாடிக்கையாளர்கள் இந்த தீபாவளியை மறக்க முடியாத நாளாக மாற்றும் ஒரு முயற்சியாக இருக்கும் என்றார். முதல்முறையாக ஆரம்பிக்க பட்ட இந்த கடையில், 200க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகள் கிடைக்கும், இந்த ஆண்டு புதிய வரவாக, பேட்பால், ட்ரோன், ஐபிஎல் சாட், படா பீக்காக், வாட்டர் பாம், மற்றும் பல விதமான பட்டாசுகள் புதிய வரவாக வந்துள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *