அணிகலன்களை அணிபவரா சருமத்தில் கவனம் தேவை
பெண்கள் அணியும் அணிகலன்கள் தோற்றத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். அணிகலன்களை அணியும்போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். மனதிற்கு ஜாலியாக இருக்கும். விரல்களில் மோதிரங்களை அணியும்போது சருமத்தில் ஒருவித தழும்புகள் ஏற்படும். இது சீரியஸான விஷயம் இல்லை என்றாலும், சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தழும்புகளை தவிர்ப்பதற்கும் கரைகள் ஏற்படாமலிருக்க என்ன செய்வது. உலோகத்தாலான மோதிரங்களை அணியும்போது அதற்குள்ளேயே நெயில் பாலிஷ் உட்புறமாக அப்ளை செய்து உலர்ந்த பின் உபயோகிக்கலாம்.
கொலுசு, மோதிரங்கள், அரைஞான் கயிறு அணியும் போது அந்த இடத்தில் ஸ்கிரீன் கார்டு அப்ளை செய்யலாம். இவற்றை தடவிய பிறகு அணிந்து கொள்வதால் சருமங்களில் தழும்புகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் இவற்றை ஒரு முறை அப்ளை செய்தாலே இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் தழும்புகள் தோன்றாது.

நாம் அணிந்திருக்கும் அணிகலன்களை ஈரத்துடன் கலட்டக்கூடாது. கை காப்பு, மோதிரம் இவற்றை கை கழுவுவதற்கு முன்னரே கழட்டிவிட வேண்டும். தண்ணீரால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம். கைகளில் லோஷன், சோப் பயன்படுத்தும் போது மோதிரங்களை கழட்டி விடுவது நல்லது.