Diwali 2023 murukku tips: தீபாவளி முறுக்கு செய்ய போறீங்களா அப்போ உங்களுக்கான ஒரு சில டிப்ஸ் மறக்காம படிங்க
நமது பாரம்பரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் வரப்போகிறது. உலகமெங்கும் ஒளிமயமாக அனைவராலும் கொண்டாட கூடிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி என்றாலே மத்தாப்பும், புத்தாடையும் தான் நமக்கு ஞாபகம் வரும். அது மட்டுமல்ல தீபாவளி வரப்போகிறது என்றாலே பெரியவங்களுக்கும் சரி குழந்தைகளுக்கும் சரி வீட்ல முறுக்கு சுடுவாங்க. நல்லா சாப்பிடலாம் என்று நினைக்கும் போது முறுக்கு இன் சுவை நாவல் நாட்டியமாடும். பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் இரவில் அல்லது மாலை வேளையில் முறுக்கு சுட ஆரம்பிப்பார்கள். குடும்பத்தில் இரண்டு பேர் முறுக்கு சுட அவர்களுக்கு உதவியாக அந்த குடும்பமே சுற்றி அமர்ந்திருக்கும்.
என்னதான் நாம் கடையில் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் சுடும் முறுக்கிற்கு மவுசு கொஞ்சம் அதிகம் தான். இப்படி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கக்கூடிய தீபாவளி முறுக்கு சுடும் பொழுது சில டிப்ஸ்களை பயன்படுத்தினால் முறுக்கு செம டேஸ்ட்டா வரும். ஏனெனில் திருமணமான பெண்கள் முதன் முதலில் இப்பொழுதுதான் முறுக்கு சுடுவார்கள். இவ்வாறு முதன்முதலாக முறுக்கு சுடும் பெண்களுக்கு கீழே கொடுக்கப்படும் டிப்ஸ் மிக உதவியாக இருக்கும். நீங்கள் சுடும் முறைக்கிற்கு உங்கள் குடும்பமே அடிமையாகி விடுவர்.
தீபாவளி முறுக்கு சில டிப்ஸ்
- தீபாவளி முறுக்கு சுட மாவு பிசையும் பொழுது சூடான நெய் , வெண்ணை அல்லது எண்ணெய் சேர்த்து பிசையும் பொழுது மாவு மிக மிருதமாக இருக்கும் உங்களுக்கு சுவையும் அதிகரிக்கும் மேலும் முறுக்கு மொறுமொறுவென வரும்.
- முறுக்கு மாவு பிசையும் பொழுது பழைய அரிசியின் மாவாக இருந்தால் தண்ணீர் குறைவாக பிடிக்கும். அதுவே புது அரிசியின் மாவில் முறுக்கு மாவு பிசையும் பொழுது அதிக தண்ணீர் பிடிக்கும்.
- அதேபோல் பச்சரிசி மாவில் தீபாவளி முறுக்கு மாவு பிசையும் பொழுது குறைவான தண்ணீர் பிடிக்கும். புழுங்கல் அரிசி மாவில் முறுக்கு மாவு பிசையும் போது அதிக தண்ணீர் பிடிக்கும் எனவே மாவின் தன்மை நிறைந்து அதற்கு ஏற்றார் போல் நீர் சேர்த்து பிசையும் பொழுது தான் முறுக்கு மாவின் பதம் சரியாக வரும்.
- தீபாவளி முறுக்கு சுடும் பொழுது எண்ணெயில் மாவு பிரிந்தாலும் அல்லது உடைந்து உடைந்து வந்தாலோ முறுக்கு மாவில் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்த பின்பு முறுக்கு சுடும் பொழுது முறுக்கு உடையாமல் மொருமொருவென நல்ல சுவையில் வரும்.
- முறுக்கு சுட கடையில் அரிசி வாங்கும் பொழுது ஐ.ஆர்.20 பச்சரிசி என கேட்டு அந்த அரிசியை வாங்கும் பொழுது நீங்கள் சுடும் அளவுக்கு மேலும் சுவையாக இருக்கும். மற்ற அரிசியை காட்டிலும் இந்த அரிசிக்கு பலகாரங்கள் மிக அருமையான சுவையில் வரும்.
- முறுக்கு சுட்ட உடனே பாத்திரத்தில் போட்டு உடனே அதை மூடி விடாதீர்கள். முறுக்கு சூடாக இருக்கும் பொழுது பாத்திரத்தை மூடி வைத்தால் முறுக்கு நவித்து போய் விடும். எனவே நீங்கள் அனைத்தும் முறுக்கையும் சுடும் வரை பாத்திரம் திறந்தே இருக்கட்டும். சுட்ட பின்பும் முறுக்கு நன்கு ஆறி உள்ளதா என்று பார்த்துவிட்டு அதன் பின்பு மூடி போட்டு மூடவும்.
- அதேபோல் ஆறிய முறுக்கை மூடும் பொழுது மூடி டைட்டாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள். மூடி லூசாக இருந்தாலும் அனைத்து முறுக்கும் நவித்து விடும்.
மேற்கூறிய ஒரு சில டிப்ஸ்களை கடைபிடித்து நீங்கள் தீபாவளி முறுக்கு சுடும் பொழுது கண்டிப்பாக தீபாவளி முறுக்கானது மிக அருமையான சுவையில் மொறுமொறுவென வரும். நீங்கள் எதிர்பார்த்த தீபாவளி முறுக்கை விட அதிக சுவையான முறுக்கு தயாராகும். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் செய்த முருக்கு இருக்கும்.