ICC உலக கோப்பை நியூசிலாந்து Vs இந்தியா; ஒரே சீசனில் 1500 ரன்கள் எடுத்து சாதனை படைத்த அணி
ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கான அரை இறுதி போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன . மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு மோதின.
பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி
இந்தியா டாஸ்கில் வெற்றி பெற்றதால் பேட்டிங்கை தேர்வு செய்தது . முதலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி ஆகியோர் முதலில் போட்டியில் களமிறங்கினர்.
கேப்டன் ரோகித் சர்மா மிக கவனமாக துல்லியமாக விளையாடி சிக்சர்களை தெறிக்க விட்டார். தொடர்ந்து சிக்சர்களை தெறிக்க விட்டு ரோஹித் சர்மா டிம் சவுத்தி வீசிய பந்தில் 47 ஆவது ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆட்டத்தை இழந்தாலும் 4.2 வது ஓவரில் மைதானத்திற்கு வெளியே பந்தை பறக்கவிட்டு சிக்சர் அடித்து அரங்கத்தையே அதிர வைத்தார்.இந்த சிக்சர் அவரது சாதனைக்கு காரணமாக அமைந்தது.
ஒரே சீசனில் 1500 ரன்கள்
ஐசிசி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 27 சிக்ஸர்களை தெறிக்க விட்ட ரோஹித் சர்மா ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் ஒரே சீசனில் அதிக சிக்ஸ்ர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா 51 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
உலக கோப்பை அரை இறுதி போட்டிகள் 47 ரன்களை எடுத்ததன் மூலம் ரோகித் சர்மா உலக கோப்பையில் அதிவேகமாக 1500 ரன்களைக் கடந்த வீரர் என்று சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அரை சதத்தை தவறவிட்டாலும் 47 ரன்களை எடுத்ததன் மூலம் ரோகித் ஷர்மா உலக கோப்பையில் அதிகமாக 1500 ரன்கள் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
ரோஹித் ஷர்மாவின் சாதனைகள் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் களம் இறங்கிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இறுதியாக நியூசிலாந்து அணியை இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நடைபெற்ற நடப்பு ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டியில் தேர்வாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ரோகித் சர்மா உலக கோப்பையில் 1500 ரன்கள் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படித்துள்ளதால் மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டிப்பு கொண்டாட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கோலாலமாக கொண்டாடி வருகின்றனர்.