விளையாட்டு

தன் சொந்த கிராமத்தில் சூப்பர் ஹீரோ பட்டம் பெற்ற ஐசிசி நடுவர்

கொரோனா பரவலால் பள்ளிக்கு செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அலுவலக வேலைகள் மற்றும் ஆன்லைன் கோச்சிங் என எல்லாம் ஆன்லைனிலேயே போவதால், சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்சனைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

மரத்தின் ஏறினால் மட்டுமே நெட்வொர்க் கிடைக்கிறது. ஐசிசி நடுவர் ஒருவரின் புலம்பல் அந்த ஊரில் கிராமத்து மக்களுக்கு கிடைத்த நன்மைகள்.

சொந்த கிராமத்திற்கு சென்று ஐசிசி நடுவர் ஒருவர் கிராமத்தின் நீண்டகாலப் பிரச்சினை ஒன்றிற்கு தீர்வு கண்டுள்ளார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் நடுவரின் ஒருவரான அனில் சவுத்ரி உத்தரபிரதேசத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.

ஒரு வாரமாக தன் ஊரிலேயே இருந்துவிட்டார். இந்த கிராமத்தில் நெட்வொர்க் கூட கிடைப்பது இல்லையாம். ஐசிசி நடுவர்கள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் போன்ற பல வேலைகள் ஆன்லைனில் நடந்து கொண்டிருப்பதால் நெட்வொர்க் கிடைக்காமல் தவித்து உள்ளார்.

இவர் மேலும் நெட்வொர்க் கிடைப்பதற்கு அரை கிலோமீட்டர் மேலே சென்று மரத்தின் மேல் ஏறினால் மட்டுமே கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு அந்த ஊரில் செல்போன் நிறுவனங்கள் தற்போது நெட்வொர்க் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நெட்வொர்க் கிடைப்பதால் மாணவர்கள் ஆன்லைனில் படிக்க முடிவதாகவும், இணையம் தொடர்பான பரிவர்த்தனைகளை செய்ய முடிவதாகவும் கிராமத்து மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதற்காக உதவி செய்த சூப்பர் ஹீரோ என்ற பட்டத்தையும் கிராம மக்கள் வழங்கியுள்ளனர். தான் புகார் அளித்த பேரில் கிராம மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று நகைச்சுவை ஆக கூறியுள்ளார்.

மேலும் இரவு நேரங்களில் நெட்வொர்க்காக வயல் வெளிகளுக்கு சென்று கொசுக்கடி வாங்க வேண்டியதில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *