ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் நடந்தது என்ன?
மனித நேயம்:
மனிதனைப் தனித்துவம் ஆக்குவது மனிதநேயம். அந்த மனிதநேயம் நாம் வீட்டினுள் அடைந்திருக்கும் நேரத்தில் வெளிபடுவதை விட சமுதாயத்தில் வெளிபடுவதே பலருக்கு தென்படுகிறது.
ஒருவர் தன் வீட்டில் பத்து நாய்கள் வளர்த்து வந்தாலும் தெருநாய் ஒன்றை அடித்தால் அவரை மனித நேயம் அற்றவர்களாகிவிடுவோம். அந்த மனிதர் 10 நாய்கள் வளர்த்தது என்ன பிரயோஜனம்?
இங்கும் அதே மனிதநேயம் தோற்க்கப்பட்டது.
ஹைதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் மருத்துவர்கள் அனைவரும் போராடுகின்றனர்.
ஐதராபாத் நடந்தது என்ன:
ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் ஒருவர் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்பதால் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டது. சமீபத்தில் சிகிச்சை பலனின்றி அந்த மனிதர் இறந்துள்ளார். இறந்த அம்மனிதரின் உற்றார் உறவினர் இது மருத்துவமனையில் வேலை செய்த ஒரு தனி மருத்துவரின் தவறு என்று எண்ணி அவரை இரும்புக் கம்பியை வைத்து தாக்கியுள்ளனர். அந்த டாக்டர் தற்போது சீரியஸாக உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காந்தி மருத்துவமனையின் மற்ற மருத்துவர் செவிலியர் என்று பலர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களிடம் கேள்வி எழுப்புங்கையில் அந்த மருத்துவர்களின் வாதம் மனதை நெகிழ்கிறது.
’24 மணி நேரமும் 200 ஐ சி யு படுக்கை கொண்ட காந்தி மருத்துவமனையில் பணியாற்றி 600க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தொண்டாற்றி இரவு பகல் பாராமல் நாய் போன்று வேலை செய்கிறோம். மருத்துவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் அரசும் வாயை திறக்க மாட்டேங்கிறது.’ என்று மருத்துவர்களின் மன ஆதங்கத்தை கூறியுள்ளனர்.
‘கொரோனாவின் இறப்பால் மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?’ என்ற காந்தி மருத்துவமனையின் மருத்துவர்களின் வாதத்தில் என்ன தவறு இருக்கிறது.
காவல்துறை அதிகாரிகள் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று காந்தி மருத்துவமனை மருத்துவர்களிடம் சொல்லியும் கூட நடுத்தெருவில் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்.
இந்த கடுமையான சூழ்நிலையில் சுகாதாரத் துறையை சேர்ந்த தூய்மை பணியாளர்களும் மருத்துவத் துறையை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் தொண்டு புரிவதாலேயே நாம் எந்த கவலையும் இல்லாமல் வீட்டினுள் அடங்கி இருக்கிறோம். இந்த நினைப்பு அனைத்து தனிநபருக்கும் வரவேண்டும்.
இந்தக் கொரோனாவால் மருத்துவர்களும் சிலர் இழந்துள்ளனர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கட்டும். ஒரு மருத்துவரை நோயாளியின் இறப்பிற்கான சுட்டிக்காட்டுவது தாக்குவது மனித நேயமற்ற செயல்.
காந்தி மருத்துவமனை பணியாளர்கள் நடுத்தெருவில் ஹைதராபாத்தில் போராடுகின்றனர் அவர்களுக்கு கை கொடுக்கும் பொருட்டு நீங்களும் உங்களது கைப்பேசியில் உங்கள் பங்கை அளிக்கலாம். சமூக வலைத்தளங்களில் #Gandhi hospital என்ற குறியுடன் உங்கள் கருத்தை போராட்டத்திற்கு தெரிவியுங்கள்.