சுற்றுலா

பரந்து விரிந்த உலகில்! சுற்றுலா செல்வதால் ஏற்படும் பயன்கள்..?

வாழ்வில் அனுபவத்தை பெற்றிட சுற்றுலா செல்வது மிக அவசியம். சுற்றுலா சென்றால் நமது உள்ளம் விசாலம் ஆகிறது. மனம் மகிழ்ச்சி அடைகின்றது. நமக்குள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உன்னத நிலை ஏற்படும். கல்வி அறிவு படித்தால் கிடைத்துவிடும். வாழ்வில் அனுபவத்தை பெற்றிட சுற்றுலா செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு நாடுகளில் சுற்றுலாத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

சுற்றுலா : நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த

பல்வேறு நாடுகளில் சுற்றுலா செல்வது ஒரு கலையாகவே மதிக்கப்படுகிறது. பல ஊர் சுற்றி வந்தவர் பண்டிதர் போன்ற சொற்றொடர்கள் நம் மொழிகளில் காணக்கிடைக்கின்றன. சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. மேம்படுத்தும் நோக்கில் பயணிகளை வரவேற்று பல்வேறு நாடுகள் அழைப்பு விடுகின்றன. இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கின்றன.

சுற்றுலா : அன்னிய செலவாணியை ஈட்டிக் கொள்ள

அன்னிய செலவாணியை ஈட்டிக் கொள்ள சுற்றுலாத்துறை பயன்படுத்தப்படுகின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் பெருகி விட்ட சூழலில் சுற்றுலாத் துறை மேலும் வளர்ச்சி அடைந்துள்ளன. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக மக்கள் அனைவரிடமும் நிலவும் பேதம் வேற்றுமையை நீக்கி சுற்றுலாத்துறை கைகொடுக்கின்றன. இதனால் அதன் பலன்களை அறிந்து அவற்றை தக்க வகையில் பயன்படுத்துவது நமது கடமை என்று சொல்லலாம்.

மேலும் எங்கு சுற்றுலா சென்றாலும் திட்டமிடல் மிகவும் அவசியமானது. அது உள் நாடாக இருந்தாலும் சரி, வெளி நாடாக இருந்தாலும் சரி, ஒரு இடத்திற்கு செல்லும் போது அந்த இடத்தின் சிறப்புகள் பண்பாட்டு முறைகளை நன்கு அறிந்து கொள்வது அவசியம். உங்களை அந்த இடங்களுக்கு செல்லும் போது தனித்து காட்டாது. புதிய இடத்திற்கு போகும் போது அங்குள்ள பண்பாட்டு சின்னங்களை பார்வையிடுவது நலம். இதனால் தாமும் அந்த நாட்டின் பண்பாட்டு முறைகளை நாம் அறிந்திட முடியும்.

சுற்றுலா : வேற்றுமையில் ஒற்றுமை

நாகரிகமும், பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மனித பண்பு. கலவையில் தானே புதுமை இருக்கிறது. மாறும் இந்த உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது. இயற்கைப் படைப்பில் இருக்கும் அழகுகள், உயிரினங்கள் ஆகியவை கண்ணையும், கருத்தையும் கவரும் தன்மையிலானவை.

குகைகள், மண்ணின் வளங்கள், மலை காட்சிகள், பரந்து விரிந்த கடல்கள், பாய்ந்து செல்லும் ஆறுகள் போன்றவை நம்மை ஆச்சரியப்படுத்தும். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டன. பல இடங்களில் பலம் தான் என்றாலும், அனுபவத்தின் மூலம் பாடம் படிக்கும். மனிதனின் கற்றலுக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விட்டது.

புதிய புதிய அனுபவங்களை பெறுவது தான் மனிதப் பிறப்பின் மகத்துவம். பல இடங்களுக்கு செல்வோம். பல்வேறு மக்களை காண்பதும், நம் உணர்வை மட்டும் இல்ல. அது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். இன்ப பொழுதுபோக்குடன் சுற்றுலா செல்வது ஒரு கலை. கிணற்றுத் தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போதும் இன்பம் தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *