உத்பான ஏகாதசி எப்படி தோன்றியது
மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி விரதம் இருப்பதால் பகையை வெல்ல முடியும். மார்கழியில் வரும் ஏகாதசி விரதம் இருப்பது மூலமாக சகல செல்வங்களையும், வைகுண்ட பதவியையும் அருள்வதாக பகவான் கிருஷ்ணர் அருளினார். தேவர்கள், முனிவர்கள் கொடுமைப்படுத்தி வந்த அசுரன் முரன் என்பவன் வலிமை உடையவனாக இருந்தான். கிருதயுகத்தில் முரனின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், முனிவர்கள் சிவனிடம் வேண்டிக்கொண்டனர்.
- மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி விரதம் இருப்பதால் பகையை வெல்ல முடியும்.
- மார்கழியில் வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க 12 மாதங்களும் விரதம் இருந்த பலன்.
- முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.
அசுரனுடன் போர் புரிந்த விஷ்ணு
சிவனோ மகாவிஷ்ணுவை சரணடைய கூறிவிட்டார். மகாவிஷ்ணுவை சரணடைந்து அசுரனின் கொடுமைகளை எடுத்துக்கூறி காத்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். இதனால் அசுரனுடன் போர் புரிந்தார். ஆயிரம் ஆண்டுகள் போர் தொடர்ந்தன. பத்ரியில் உள்ள ஒரு குகையில் ஓய்வு எடுத்துக் கொண்ட மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு பெண் தோன்றினாள்.
நடந்ததை அறிந்து விஷ்ணு
அந்தப் பெண் முரண் அசுரனுடன் போரிட்டு கொன்றால். உறக்கத்தில் இருந்து விழித்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து அப்பெண்ணிற்கு ஏகாதசி என்ற பெயரைச் சூட்டி பாராட்டி பதினோராவது திதியான ஏகாதசி திதியானால். அப்பெண் தோன்றிய நாளிலிருந்து ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு சகல செல்வங்களை அருளி முடிவில் வைகுண்ட பதவியை தருவதாக அருள்புரிந்தார்.
ஏகாதசி பெண் தோன்றிய திதி
இந்த ஏகாதசி திதி மார்கழி மாதத்தில் தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி என்ற பெயரானது. அன்று முதல் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 12 மாதங்களும் மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என 24 ஏகாதசி வருகின்றன. வருடம் முழுவதும் இருக்க முடியாதவர்கள். மார்கழியில் வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க 12 மாதங்களும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.