Vishu 2024 : வீட்டில் தமிழ் புத்தாண்டு 2024 எப்படி வரவேற்கலாம் ???
தமிழ் மாதங்களில் முதலாவது மாதமாக சித்திரை மாதம் வருகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் வருட பிறப்பு திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனை தமிழ் புத்தாண்டு சித்திரை கனி , சித்திரை கனி காணுதல், விஷு என பல பெயர்களால் அழைக்கும் வழக்கம் உண்டு. வருடத்தின் முதல் நாள் நாம் எதை பார்க்கிறோமோ என்ன நினைக்கிறோமோ அதுவே அந்த ஆண்டு முழுவதும் நமக்கு பலனாக வரும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து உள்ளது. அந்த நம்பிக்கையின் படி சித்திரை ஒன்றாம் தேதி நாம் வீட்டில் மங்கலமான பொருட்களை வைத்து வழிபடுவதால் அந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும்.
சித்திரை கனி காணுதல் 2024
இந்த ஆண்டு சித்திரை கனி ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வருகிறது. நாம் தமிழ் புத்தாண்டுக்கு முதல் நாளே அதாவது ஏப்ரல் 13-ஆம் தேதி நமது வீடுகளை சுத்தம் செய்து பூஜை அறையில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இரவு தூங்குவதற்கு முன்பு தமிழ் புத்தாண்டு நாளில் நாம் முதலில் பார்க்கும் விஷயங்களை செய்து வைத்துவிட வேண்டும்.
கண்ணாடி , நாணயம் முக்கனிகள் தானிய வகைகள் பருப்பு வகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பூல தட்டில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த தட்டை பார்த்துவிட்டு சென்று கண்ணாடியில் நமது முகத்தை பார்த்தால் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.
எனவே தமிழ் புத்தாண்டில் சித்திரை கனி காணும் நிகழ்வை ஒவ்வொரு வீட்டிலும் செய்ய தவறாதீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பும் பொங்கி வழிய எந்த ஒரு நாள் நீங்கள் செய்யும் செயல் ஆண்டு முழுவதும் பலன் தரும்.