ஃபாஸ்டேக் கட்டண முறை அமல்: ஃபாஸ்டேக் எடுக்க என்ன செய்யலாம்?
தேசிய நெடுஞ்சாலைகளில் நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. ஒருவேளை வாகன ஓட்டிகள் பாஸ்ட்டேக் முறைக்கும் மாறாத பட்சத்தில் இன்று முதல் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- ஃபாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
- ஃபாஸ்டேக் முறைக்கும் மாறாத பட்சத்தில்.
- ஃபாஸ்டேக் வாகன ஓட்டிகள் எழுதில் பெற.

ஃபாஸ்டேக் எழுதில் பெற
வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில், ஆதார் அட்டை மற்றும் வாகனங்களில் ஆர்.சி நகலை கொடுத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாகன ஓட்டிகள் எழுதில் பெற்றுக்கொள்ள முடியும்.
சுங்கச்சாவடி : வாகன நெரிசலை குறைக்க
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக சுங்கக் கட்டணம் செலுத்துவதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளன. ஃபாஸ்டேக் இல்லை என்றால் இன்று முதல் கட்டணத்தை இருமடங்காக வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்.

மேலும் ஃபாஸ்டேக் பயன்படுத்த பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார். ஃபாஸ்டேக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.