For pregnancy mental health: நீங்கள் கர்ப்பிணியா இதோ உங்களுக்கான முக்கிய பொறுப்பு படியுங்கள்
சிலரது வாழ்வு எதிர்பாராத அசாதாரணமான சவால்கள் நிறைந்த வாழ்வாக இருக்கின்றது. அதுவும் ஒரு பெண்ணாக பிறக்கும்போது அவள் இன்னொரு ஜீவனுக்கு தாயாக இருக்கும் போது அவளை இந்த அவசர உலகம் புரிந்து கொள்ளும் விதம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்காது. இந்த மாதிரியான மிகக் கடினமான சூழலில் கர்ப்பிணி பெண்கள் தங்களை திடப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் சவால்கள்
நம்மை சுற்றி இருக்கும் கணவரும் கணவர் வீட்டாரோ அல்லது நமது வினைப்பயணம் எதுவோ ஒன்று நம்மை எப்போதும் சோதிக்கும். எல்லா சோதனையும் தாங்கிக் கொண்ட நம்மால் மிகக் கடினமான முக்கியமான கர்ப்ப காலத்தில் எந்த ஒரு சூழலையும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவரை உங்கள் கணவர் கணவர் வீட்டார் சரியாக இருந்து கர்ப்ப கால நேரத்தில் கவனக்குறைவாக அல்லது அறியாமையால் அல்லது வேண்டுமென்று நமக்கு நமது குழந்தைக்கு எதிராக நடக்கும் சூழல்கள் எதிர்பாராமல் நடக்கின்றன அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களின் மன தைரியம்
எதிர்பாராத சமாளிக்க முடியாத ஏமாற்றமான காரியங்களை உங்கள் கணவரோ அல்லது உங்கள் கணவர் வீட்டாரோ செய்யும்போது உணர்ச்சி வயப்படுதல் என்பதை கர்ப்பிணிகள் குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஏற்படும் மன உளைச்சல், கவலை ,ஏமாற்றம், கடும் கோபம், மன அழுத்தம் ,பண பிரச்சனை, குடும்ப உறவினர் விலகி போதல் கணவர் விலகி போதல் புரிந்து கொள்ளாமல் இருத்தல் நமக்குத் தக்க ஆதரவு எங்கும் இல்லாமல் போதல் அனைவரும் இருந்தும் இல்லாமல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுதல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தல் வேதனை கொள்ளல் இது மாதிரியான சமயத்தில் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நாம் கவலைப்படுவோம் வேதனைப்படுவோம். நம்மால் அறிந்தே நம்மை கட்டுப்படுத்த முடியாத சூழலில் தவித்து நிற்போம் தயவு செய்து கர்ப்பிணி பெண்கள் மிகுந்த மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும். மனித மனம் ஒரு குரங்கு அது கணவனாக இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோர்களாக இருந்தாலும் நமக்கு ஆதரவு இருக்கும் இல்லாமல் போகும் ஆனால் அதையெல்லாம் நினைத்து கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நாம் ஒரு தாய் ஒரு ஜீவனை பெற்றெடுக்கும் பொறுப்புள்ளவன் என்ற பொறுமையை பத்து மாதம் கையாள வேண்டும். அதுவரை என்ன நடந்தாலும் ஆக்ரோஷம் கோபம் மன உளைச்சல் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று காலம்
அதுவும் கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் என்ற முக்கியமான மாதத்தில் ஏற்படும் சவால்களை தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். கணவர் வீட்டார் கண்டுகொள்ளாமல் போகலாம் அல்லது கணவரே கண்டு கொள்ளாமல் போகலாம். எதையோ எதிர்பார்த்து பழகலாம் கர்ப்பிணி பெண்ணின் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் போகலாம். இது மாதிரி நம்மை சுற்றி என்ன நடந்தாலும் தைரியம் மற்றும் நமக்கு இருக்கும் பொறுப்பை நாம் உறுதியாக பின்பற்ற வேண்டும் அமைதி மற்றும் பொறுமை,அன்பு , காதல் ஆகியவற்றை இறுதிவரை கையாள வேண்டும்.
இது மிகவும் அவசியமானதாகும் மேலும் நம்மை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படும் அந்த கஷ்ட காலம் சில தொடு வர்மம் மூலம் நம்மை நாம் அமைதி படுத்தலாம் மேலும் நமது எதிர்பாராத சவால்களை ஆண்டவன் அருளால் சந்திக்கலாம் இங்கு சில தொடு வர்ம புள்ளிகளை கொடுத்துள்ளோம். அவற்றை நீங்கள் சரியாக பார்த்து படித்து பின்பற்றி வாருங்கள் உங்களது மன உறுதியானது வலுப்படும் கட்டுக்கு அடங்காமல் ஏற்படும் மன உளைச்சல் மன அழுத்தம் ஏமாற்றம் ஆகிய அனைத்தும் சரியாகும்.
தொடு வர்ம புள்ளிகள்
கீழே கொடுத்துள்ள படத்தில் ஆள்காட்டி விரலில் முதல் கோடு அடுத்தது. ஒரு புள்ளி இருக்கும் அந்த புள்ளியை இரண்டு நிமிடம் அல்லது மூன்று நிமிடம் மெதுவாக அழுத்தம் கொடுத்து வர உங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி, மன உளைச்சல், ஏமாற்றம், வேலைப்பளு, அழுத்தம் ஆகிய அனைத்தும் சிறிது தடம் மாறி உங்களை அமைதிப்படுத்தும். தயவு செய்து தாய்மார்கள் இதை பின்பற்றுங்கள் நம்மை நம்பி ஒரு ஜீவன் இருக்கின்றது அதனைக் காப்பாற்றுங்கள்.
தாமரை முத்திரையும் , பயன்களும்
கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான முத்திரைகளை இங்கு கொடுத்துள்ளோம். தாமரை முத்திரை தினசரி ஐந்து அல்லது பத்து நிமிடம் வைத்து வாருங்கள். அது உங்களது வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மன வலிகள் அனைத்தையும் போக்கும் ஆற்றல் கொண்டது. விரல்கள் பத்தையும் தாமரைப் போல் விரித்து வைக்க வேண்டும்.
சுண்டுவிரல் இரு கைகளையும் இணைத்து பின்பு மற்ற நான்கு விரல்களையும் விரித்து பெருவிரலை இரண்டையும் ஒன்றிணைத்து 15 நிமிடங்கள் வைக்கலாம் தினசரி கர்ப்பிணி பெண்கள் வைக்க வேண்டும். அனைவரும் இதனை வைக்கலாம் ஆனால் கர்ப்பிணிகளுக்கு இது மிகுந்த முக்கியமான காலகட்டம் ஆகும். ஆகையால் அவர்கள் கட்டாயம் இந்த தாமரை முத்திரை செய்யலாம். இதன் மூலம் உடலில் இருக்கும் அழுத்தம் மன அழுத்தம் வழிகள் மூலமாக சரியாகும்.
உங்களுக்குப் பிடித்த அமைதி கொடுக்கும் உங்களை அறியாமல் உங்களது கவலையை போக்கும் ஏதாவது ஒரு இசை அல்லது தெய்வீக பாடல் ஏதாவது ஒரு குரல் என்று இருக்கும். அதனை நீங்கள் இனம் கண்டு பிடித்து தினசரி கேட்டு வாருங்கள். இது உங்களை சுற்றி இருக்கும் சிக்கல் சவால்கள் ஆகியவற்றிலிருந்து சாதிக்கவும் தனித்து நின்று வெற்றி பெறவும் வலிமை தரும்.
கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவை
கர்ப்பிணி பெண்கள் பத்து மாதங்களும் எல்லாம் வல்ல இறைவனை தினசரி எண்ணி வழிபாடு நடத்தி வரும் பொழுது ஆன்ம சக்தியானது அதிகரிக்க பெறும்.
கர்ப்பிணி பெண்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டியது உடல் ஆற்றல் அத்துடன் மன ஆற்றல் இவை இரண்டும் பத்து மாதம் சரியாக இருக்கும் போது நீங்கள் பெற்றெடுக்கும் பெரும் செல்வமான குழந்தை புத்தி மானாக ஞானவனாக ஆரோக்கிய ஜீவனாக இந்த மண்ணில் ஜெனித்து வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி காணும்.
பத்து மாதம் உங்களது மன உறுதி நீங்கள் படிக்கும் மன உறுதி வாய்ந்த புத்தகங்கள் பாசிட்டிவ் எண்ணங்களை விதைக்கும் வாசகங்கள் பேச்சுக்கள் கேட்கும் போதும் படிக்கும் போதும் பார்க்கும் போதும் உங்களை அறியாமலேயே உங்களது குழந்தையும் அதனை கற்கின்றது. கருவிலேயே அது ஞானம் பெறுகின்றது பிறப்பெடுத்து இந்த பூமியில் வாழும் போது நீங்கள் எதிர்பாராத வாழ்வியல் மாற்றங்களை அந்த ஜீவனை உருவாக்கும் உலக வாழ்வில் அனைத்தும் கடந்து சாதிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பதிவு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தினசரி நீங்கள் அன்பு ஒன்றை மட்டும் மனதில் வைக்க வேண்டும். ஐ லவ் யூ என்று காலில் 100 முறை 200 முறை எழுதி வாருங்கள் வேலை செய்யும்போது உங்களுக்கு பிடித்த மந்திரங்களை ஜெபித்து வாருங்கள் அல்லது பிடித்த இசையை கேட்டு வாருங்கள். உங்களை சுற்றி பேசுபவர்கள் பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள். அப்போது உங்களை யாராலும் அசைக்க முடியாது பத்து மாதம் முடிந்து பச்சிளம் குழந்தையை பெற்று அதனை ஆளாக்க தற்போது இருந்து நாம் தயாராக வேண்டும்.
தினசரி தூங்கி எழுந்ததும் கரங்களைப் பார்த்து கடவுளை வேண்டி வாழ்வில் வெற்றியைப் பெற பிரார்த்தனை செய்வோம் அல்லது தியானம் செய்வோம் இதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.