ஆரோக்கியம்வாழ்க்கை முறை

லாக் டவுனில் நீங்கள் இழந்த சக்தியை பெறுவதற்கு இத ஃபாலோ பண்ணுங்க

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எந்த வயதிலும் நல்ல ஸ்டாமினா இருப்பது முக்கியம். எந்த ஒரு செயலையும் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு நபரின் திறன், துரதிஷ்டவசமாக ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை இல்லாததால் உங்களின் திறன் குறைந்து இருக்கும். கொரோனா உங்கள் வாழ்க்கை முறையை மெதுவாக மாற்றி வருகிறது.

கொரோனா உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா பலரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. கொரோனா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுகளை தவற விடக்கூடாது. நீங்கள் மீண்டும் வடிவம் பெறவும். உங்கள் திறனை வளர்க்கவும். ஆரோக்கியம் மற்றும் கவனம் உள்ள உணவை சாப்பிடுவது மோசமான முடிவு அல்ல.

அனைத்து சாகசங்களுக்கு பிறகு ஆரோக்கியத்தை பெறுவதற்கான நேரம் இது உங்களால் உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் உங்களுக்கு தேவையான சத்துகளை டேப்லெட் அல்லது ரூட் வடிவில் பெறலாம். ஆயுர்வேத மூலிகைகள் நன்மைகளை வழங்கும். நட்ஸ், பருப்பு வகைகள், பயறுகள், பருவகால பொருட்களை தாராளமாக உண்ணலாம். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ற படி உணவு இடைவெளியை பராமரிக்க வேண்டும். சரியான நேர இடைவெளியையும், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதையும், இயற்கையான செரிமானத்தை சீரமைக்க வேண்டும். பழையபடி உங்கள் ஆற்றல் கொண்டுவர சில நாட்கள் உங்களுக்கு கடினமாக இருக்கும். சுற்றியுள்ள நிறைய விஷயங்கள் மாறி இருக்கும். இவற்றை சரி செய்ய உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நேரம் கொடுக்க வேண்டும்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, மனத் தெளிவை அதிகரிக்கவும், மன நிம்மதியை பெறுவதற்கும் யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளலாம். எப்பொழுதும் ஒரே அளவு தூக்கத்தை அதாவது தூக்க ஒழுக்கத்தை பராமரிப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பகலில் தூங்குவதை தவிர்த்து, சரியான நேரத்திற்கு உறங்கச் சென்று அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *