Reduce belly fat tips: தொப்பையால் ரொம்ப தொல்லையா இருக்கா உடனே இதை செய்யுங்க…
தொப்பை தரும் தொல்லை
தொப்பையால் ரொம்ப தொல்லையாக இருக்கிறது என்று யோசித்து கவலைப்படும் நண்பர்களுக்காக ஒரு எளிய முறை டிப்ஸ். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல நமது உடல் பருமனும் நமது உயரத்திற்கு தகுந்தார் போல் சரியாக இருக்க வேண்டும். அதனை மீறி இருந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அதில் சற்று தாமதம் ஏற்படும். நமக்கே நம்மில் அவநம்பிக்கை ஏற்படும். இப்போது பல பேர் தொப்பையை குறைக்க பல முறைகளை கையாண்டு வருகின்றனர் அதில் உங்களுக்கான ஒரு எளிய டிப்ஸை இப்போது பார்க்கலாம்.

தொப்பையை குறைக்கும் பானம் தேவையான பொருட்கள்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை – 1/2 பழம்
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1 டம்ளர்
தேன் – 2 டீஸ்பூன்
மேலும் படிக்க : உடல் எடையை குறைக்கும் வெந்தயத்தின் மகிமை

தொப்பையை குறைக்கும் பானம் செய்முறை
ஒரு டம்ளர் நீரில் சீரகம், மல்லி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் ஒரு பாத்திரத்தில் நாம் ஊறவைத்த சீரகம் ,மல்லி, சோம்பு ஆகியவற்றை நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பானம் நன்கு கொதித்த பின்பு அதில் எலுமிச்சை சாறு,தேன், உப்பு ஆகியவற்றை சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் தொடர்ந்து குடித்து வர படிப்படியாக தொப்பை குறையும்.

தொப்பை குறைவதை நீங்களே உணர்வீர்கள். இந்த பானத்தோடு சேர்த்து உங்கள் நேரத்திற்கு தகுந்தாற்போல் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்யும் பொழுது மிக விரைவில் உங்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.நீங்களும் மற்றவர்களைப் போல உடல் ஆரோக்கியத்தோடும் மன தைரியத்தோடும் இருப்பீர்கள் ஒரு செயலை மிக சீக்கிரமாக செய்து முடிப்பீர்கள்.
மேலும் படிக்க : உடல் சூட்டை தணிக்கும் நார்த்தங்காய் ரசம்
Image source credit : Google