சமையல் குறிப்புவாழ்க்கை முறை

டக்கரா,அமேசிங்கா ஒரு ரெசிபினா? அது பக்லவா மில்க் கேக்

மில்க் கேக் இந்த ரெசிபி மிக எளிமையானதாக இருக்கும். மில்க் பயன்படுத்தி செய்யும் ரெசிபி தான் மில்க் பக்லவா செய்வதற்கு நமக்கு பிடித்த நறுமணப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பக்லவா மில்க் கேக்

தேவையான பொருட்கள்

ப்லோ சீட் 6, மில்க் கேக் துண்டுகள் 5, நறுக்கிய பிஸ்தா பருப்பு கால் கப், வெண்ணை உருக்கியது அரை கப், சர்க்கரை 2 கப், தண்ணீர் கால் லிட்டர், ரோஸ்வாட்டர் 2 ஸ்பூன்.

செய்முறை : இன்னொரு பெரிய பாத்திரத்தில் மில்க் கேக் உதிர்த்து வைத்து விடவும். பிஸ்தா பருப்பை சேர்க்க வேண்டும். உதிர்த்த மில்க் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக கலந்து விடுங்கள்.

முதலில் ப்லோ சீட்டை எடுத்து பேக் செய்யும் டிரேயில் விரித்து வைத்துக் கொள்ளவும். இதன் மேலே வெண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை பேக் பண்ணக்கூடிய ட்ரேயில் பாதியை தூவி விடவும். இதன் மேல் இன்னொரு ப்லோ வைத்து அதன் மேல் வெண்ணெய் தடவி மில்க் கேக் மற்றும் பிஸ்தா கலவையிலிருந்து எடுத்து இன்னொரு லேயர் பரப்ப வேண்டும்.

இப்போது இன்னொரு ப்லோ சீட்டை எடுத்து இன்னொரு லேயர் வைத்து வெண்ணெய் தடவவும். லேயர் லேயராக 5 ப்லோ சீட்டுகள் வரை பயன்படுத்தலாம்.

மேலே உள்ள கடைசி ப்லோ சீட்டில் மேல் வெண்ணையை தடவி ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் நேரம் வைத்து வெளியே எடுத்து நார்மல் டெம்பரேச்சர் வந்ததும் தேவையான வடிவத்தில் வெட்டி.

பேக்கிங் ட்ரேயில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் ஓவனில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும். இது வெளியாகும் நேரத்தில் ஒரு வானலியில் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்திய பிறகு சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் சேர்த்து, சிரப்பை கொதிக்க வைக்க வேண்டும்.

ஓவன் இலிருந்து வெந்த ட்ரேயை வெளியில் எடுத்த பிறகு காய்ச்சிய சர்க்கரை சிரப்பை மேல் ஊற்றி பரப்பி ஆறியதும், ட்ரேயிலிருந்து வெளியே எடுத்து துண்டுகளை தட்டில் வைத்து பரிமாறலாம். சுவையான பக்லவா கேக் வீட்டிலேயே தயார் செய்து குட்டீஸ்களுக்கு கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *