சுரைக்காய் அல்வா
சுரைக்காயில் அல்வா செய்தால் சுவை மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. நாள்தோறும் இரவு படுக்கும் போது ஒரு டம்ளர் பசும் பாலுடன் ஒரு ஸ்பூன் இந்த அல்வாவை எடுத்து கலக்கி சாப்பிட்டு வர உடல் இளைத்தவர்கள் நன்கு உடல் வளம் பெறுவர். நரம்பு, இதயம், குடல் இவற்றிற்கு பலம் சேர்க்கும்.
- சுரைக்காயில் அல்வா செய்தால் சுவை மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
- நரம்பு, இதயம், குடல் இவற்றிற்கு பலம் சேர்க்கும்.
- அல்வா சாப்பிட்டு வர உடல் இளைத்தவர்கள் நன்கு உடல் வளம் பெறுவர்.
சுரைக்காயை எடுத்து மேல் தோலை சீவி உள்ளே விதைப் பகுதியை சீவி எடுத்து சிறிய துண்டு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதை தண்ணீர் விடாமல் பத்து பதினைந்து நிமிடம் வேக வைத்து வெளியே எடுத்து ஆற வைத்து நன்கு துணியால் பிழிந்து எடுத்து வைக்கவும். அல்வா தயாரிப்பதற்கு கீழ்கண்டவற்றை தயாரித்து எடுத்துக் கொள்ளவும்.
சுரைக்காய் அல்வா
தேவையான பொருட்கள்
சுரைக்காய் பிழிந்தெடுத்த சாறு இரண்டு டம்ளர், உலர் திராட்சை 8, ஏலக்காய்-3, பாதாம் பிஸ்தா 7, பால்கோவா 100 கிராம், நெய் அரை கப், குங்குமப்பூ கால் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டம்ளர், கிராம்பு 6.
செய்முறை விளக்கம்
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோலை நீக்கி முக்கால் பகுதியை எடுத்து இதனுடன் குங்குமப்பூவை சேர்த்து நன்கு மையாக அரைத்து வைக்கவும். காய்ந்த திராட்சை, பாதாம் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். கிராம்பு, பட்டை, ஏலம் இவற்றை ஐந்து நிமிடம் வறுத்து உடனே தயாரித்து வைத்துள்ள சுரைக்காயை அதே நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
சர்க்கரையையும் கலக்கி பசையாக தயாரித்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் கூடவே போட்டு நன்கு கிளறி விடவும். தண்ணீர் பசை போகும் வரை கிளறி விடவும். அல்வா பக்குவம் வந்தவுடன் இறக்கி வைத்து உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, திராட்சை இவைகளை போட்டு கிளறவும்.
இதனுடன் சிறிதளவு ரோஸ்வாட்டர் விட்டு கலக்கி விடவும். ஆற வைத்து கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம்.