சமையல் குறிப்புவாழ்க்கை முறை

முறுக்கு மொறு மொறுன்னு செய்யணுமா?

தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் கொரோனா காலங்களில் எங்கேயும் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வீட்டிலேயே பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். பலகாரங்களை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே குடும்பத்தாருக்கு செய்து கொடுக்கலாம்.

  • மொரு மொருன்னு முறுக்கு வேண்டுமா?
  • பொட்டுக்கடலை மாவு முறுக்கு மொரு மொரு செய்யணுமா?
  • வாயில் போட்ட உடனே எளிதாக நொறுங்கும். சாப்பிடத் தூண்டும். பொட்டுக்கடலை மாவு முறுக்கு.

மொரு மொருன்னு முறுக்கு வேண்டுமா? பொட்டுக்கடலை மாவு முறுக்கு மொரு மொரு செய்யணுமா? வாயில் போட்ட உடனே எளிதாக நொறுங்கும். சாப்பிட, சாப்பிட இன்னும் சாப்பிடத் தூண்டும். நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். மொரு மொருனு சாப்பிடத் தூண்டும் முறுக்கு வீட்டிலேயே எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.

மொரு மொரு முறுக்கு

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி அரை படி, பொட்டுக்கடலை கால் படி, வர மிளகாய் 5, பெருங்காயத் தூள் கால் ஸ்பூன், ஓமம் ஒரு ஸ்பூன், கருப்பு எள்ளு ஒரு ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. வெண்ணெய் 50 கிராம்.

செய்முறை விளக்கம்

ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை 4 மணி நேரம் கழுவி ஊற வைத்து கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது இடையில் வரமிளகாயை கிள்ளி போட்டு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இட்லி மாவு பதத்தில் மையாக அரைக்க வேண்டும்.

ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை நைசாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவில் பொட்டுக்கடலை மாவை கலந்து கெட்டியாக பிசையவும். ஓமம், வெண்ணை, எள்ளு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து முறுக்கு அச்சில் வைத்து பிழிந்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பிழிந்து வைத்துள்ள முறுக்கு எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வெந்ததும் எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள எல்லா மாவையும் பிழிந்து, சுட்டு எடுத்து ஒரு சம்படத்தில் ஸ்டோர் செய்து வைக்கவும். இந்த கடையில் வாங்கும் முறுக்கு டேஸ்ட்டை விட டேஸ்டாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *