குழந்தைகள் நலன்வாழ்க்கை முறை

குழந்தைகள் சிறந்த மனிதர்களாக வளரணுமா? இத கவனிங்க!

உங்கள் குழந்தைகளை சிறந்த மனிதனாக வளர்க்க பெற்றோர்களின் கடமை என்ன செய்யலாம்? உங்கள் குழந்தைகளை அடிக்கடி பொய் சொல்லுகிறார்கள் என்பதற்கான காரணத்தை தேடுங்கள். இது பற்றிப் பேசி எடுத்துக் கூற வேண்டும். காரணத்தை கண்டுபிடித்து தீர்வு காணாவிட்டால் பொய் சொல்வதே நிரந்தர பழக்கமாகிவிடும். ஒரு பொய் சொன்னால் இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.

இதனால் எதிர்காலத்தில் யாரும் குறை சொல்லமுடியாத ஒரு ஆளாக உருவாக்க முடியும். நேர்மையாக இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதை எடுத்துக்கூற வேண்டும். திட்டி அடிப்பதால் நிலைமை மோசமாகவே தவிர, நல்வழிபடுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.

தவறு செய்துவிட்டால் பெற்றோர்கள் தண்டிப்பார்கள் என்ற பயம் வரும் போது பொய் சொல்லுவார்கள். எனவே உங்களிடம் உண்மையைச் சொன்னால் தண்டனைக்கு பதிலாக நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வர வைக்க வேண்டும். இதனால் என்ன நடந்தாலும் என்ன பிரச்சினை வந்தாலும் உங்களிடம் வந்து உண்மையை சொல்ல தயங்க மாட்டார்கள். உங்கள் வாழ்வில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் பிறருடைய பயனுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகள் அடிக்கடி பொய் சொல்வதை உணர்ந்தால் உடனே கண்டிக்காதீர்கள். பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். மற்றவர்களுடைய வாழ்க்கை பாடங்கள், அனுபவங்கள், நேர்மை மற்றும் உண்மை பற்றிய புத்தகங்களைப் படிக்க வையுங்கள். இது எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும். குழந்தை வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து தான் வளரும். இவர்கள் நேர்மையாக உண்மையாக இருப்பதைப் பார்க்கும் குழந்தைகளும் அவ்வாறு இருக்க விரும்பும்.

அவர்கள் ஏமாற்றுவதை, பொய் சொல்வதை பார்க்கும் குழந்தைகளும் அதே போல் தான் வரும். குழந்தைகள் தங்களிடம் பொய் சொல்லும் தருணத்தை ஒவ்வொரு பெற்றோரும் சந்தித்திருப்பார்கள். உண்மையை மறைத்து பொய் சொல்லி சமாளிப்பது சிறு குழந்தைகளிடையே அதிகம் காணப்படும். உண்மையை சொல்லி அடி வாங்குவதை தவிர்க்க எளிதாக பொய் சொல்லி விடுவார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகும் இதே பழக்கம் தொடர்ந்தால் அது பெரிய பிரச்சினைக்கு ஆளாக்கி விடும். எனவே சில வழிகளை சிறுவயதிலேயே கற்பித்தல் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *