டயட் டிப்ஸ் எளிதாக உடல் எடையை குறைக்கணுமா?
உடல் எடை குறைக்க விரும்புவோர் உண்ணாவிரத முறையை பின்பற்றி எடை குறைந்து ஆரோக்கியம் பெறலாம் என்கிறார்கள். விரதம் முறைமூலம் தன்னைத்தானே புதுப்பிக்கும் முறை செயல்பட்டு சரும பளபளப்பு, நல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படுத்தும்.
எப்பொழுதும் உணவு முறையை தொடங்கும் போது இரவு 8 மணிக்கு உங்கள் முதல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து, நல்ல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவான சிக்கன், மட்டன், முட்டை பாதாம், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தலாம். நீங்கள் தூங்கி விட்டு அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு உங்கள் இரண்டாவது உணவை உண்ண வேண்டும். இதற்கு இடைப்பட்ட 16 மணிநேரம் தான் உங்களுடைய உண்ணாவிரத சமயம் 16 மணி நேரத்தில் நீங்கள் நிறைய நீர் பருக வேண்டும்.
ஜூஸ், உப்பிட்ட பிளாக் காபி, கிரீன் டீ, மல்டி விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். இப்படி 8 மணி நேரம் குறைவான மாவுச்சத்து உணவு உண்டு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் உங்கள் உடலில் சேமிக்கப்பட்டு வைத்துள்ள கெட்ட கொழுப்புகள் எரியும். இவற்றின் மூலம் உடல் எடை குறையும்.
இன்சுலின் அதிகம் தூண்டப்படுவதால் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். இவ்வாறு உண்ணா விரத முறையை கடைபிடித்து நம் உடல் எடையை குறைக்க முடியும். தென்னிந்தியர்களின் உணவுப் பழக்கம் என்பது மிக எளிதானது.
காலையில் டிபன், மதியம் அரிசி சாதம், இரவு டின்னர், நடுவில் டீ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை உள்ளடக்கியது. நமது அன்றாட உணவு முறையாக இருக்கின்றன. நாமும் தென்னிந்திய உணவுகளில் அதிகம் இருப்பது கார்போஹைட்ரேட், மாவுச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மூன்று வேளை உணவு, மூன்று வேளை நொறுக்குத் தீனி எடுத்துக் கொண்டே இருப்பதால் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் பழுதடைந்து நீரிழிவு என்றும் சர்க்கரை வியாதியை கொண்டுவரும். ஆக உண்ணாவிரதம் முறைதான் எளிதில் எடை குறைய மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரச் செய்யும் மாபெரும் யுக்தி.