ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அடிப்படை எது!

மங்கள வாரத்தை மங்களமாக துவங்குங்கள்.

ஊரடங்கு என்ற பெயரில் வீட்டில் இருப்பதை நாம் தண்டனையாக அனுபவிக்காமல் வசந்தமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். அது எப்படி என்பதற்குப் விடை இப்படி, ஆன்மிகம்.

வாழ்க்கை முறையின் அடிப்படை ஆன்மிகம். பூஜை புனஸ்காரங்களை நம் வாழ்க்கை முறையில் முக்கிய பங்காக கொண்டு அதனை தழுவி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்.

நாம் ஆன்மீகத்தில் இறங்கும் பொழுது அகமும் புறமும் சுத்தம் அடைகிறது. நாம் நல்ல சிந்தனைகளுடன் செயல்களை செய்யும் பொழுது வாழ்க்கை மகிழ்ச்சியில் திளைக்கும்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 18/5/2021

கிழமை- செவ்வாய்

திதி- சஷ்டி (காலை 8:40) பின் சப்தமி

நக்ஷத்ரம்- பூசம் (காலை 11:16) பின் ஆயில்யம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்

ராசிபலன்

மேஷம்- உதவி
ரிஷபம்- தனம்
மிதுனம்- களிப்பு
கடகம்- பரிவு
சிம்மம்- ஆக்கம்
கன்னி- ஆர்வம்
துலாம்- தோல்வி
விருச்சிகம்- பெருமை
தனுசு- மகிழ்ச்சி
மகரம்- பொறுமை
கும்பம்- சோதனை
மீனம்- தடங்கல்

மேலும் படிக்க : சுபிட்சமாக இருக்க கனகதாரா ஸ்தோத்திரம்!

தினம் ஒரு தகவல்

சுவாசநோய் அலர்ஜி குணமாவதற்கு குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *