Diwali 2023: தீபாவளி திருநாளில் எம தீபம் 2023 ஏற்றும் முறை, நேரம் மற்றும் கிடைக்கும் நன்மைகள்.. யாரெல்லாம் எம தீபம் ஏற்றலாம்
தீபாவளி திருநாளுக்கு முதல் நாள் அன்று எம தீபம் ஏற்றப்படுகிறது. எம தீபம் எதனால் ஏற்றுகிறோம் எம தீபத்தின் பயன்கள் என எந்த நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும் யாரெல்லாம் எம தீபம் ஏற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மாகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நாம் மாகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்து வழிபடுகிறோம். அப்படி பூலோகத்திற்கு வரும் நம் முன்னோர்கள் மீண்டும் வானுலகத்திற்கு செல்ல வழிகாட்டும் மற்றும் வெளிச்சம் தரும் தீபமாக எம தீபம் விளங்குகிறது. துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எம தீபம் முக்கியமான தீபமாக விளங்குகிறது.
எம தீபம் 2023 ஏற்றும் நேரம்
புரட்டாசி அமாவாசையில் பூலோகத்திற்கு வரும் முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்ல வழி காட்டும் மற்றும் வெளிச்சத்தை காட்டும் எம தீபத்தை தேய்பிறை திரையோதசி தேதியில் தான் ஏற்ற வேண்டும். எப்பொழுதும் எம தீபம் ஏற்றுவது தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் வரும் அந்த நாளில் தான் எம தீபம் ஏற்ற வேண்டும். 2023 எமதீபம் ஏற்றுவதற்கான நேரம் என்னவென்றால் திரயோதசி திதியானது நவம்பர் 10 2023 பிற்பகல் 12.36 PM மணிக்கு தொடங்குகிறது நவம்பர் 11 2023 பிற்பகல் 1.57 PM மணிக்கு முடிவடைகிறது. இந்த வருடம் எம தீபம் 2023 ஏற்றுவதற்கு சரியான தேய்பிறை திரயோதசி திதி நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 32 மணிக்கு தொடங்கி 6.47 மணி வரை உள்ளது. இந்த வருடம் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் தேய்பிறை திரையோதசி திதியில் நீங்கள் எம தீபத்தை சரியான உகந்த நேரம் ஆகும்.
மேலும் படிக்க : யம தீபம் ஏற்றி கொண்டாடப்படும் தீபாவளி!
எம தீபம் 2023 ஏற்றும் முறை
எப்பொழுதும் எபதீபமானது உங்கள் வீட்டின் வெளியில் உயரமான பகுதியில் தான் ஏற்ற வேண்டும் உயரமான பகுதியில் ஏற்ற முடியாதவர்கள் உங்கள் வீட்டு வாசற்படிகள் கோதுமை அல்லது மணல் சிறிதளவு எடுத்து ஒரு மேடு போல் செய்து கொண்டு அதன் மேல் வைத்து எம தீபம் ஏற்றலாம்.
வாசற்படியில் ஏற்ற இயலாதவர்கள் உங்கள் வீட்டில் உயரமான பகுதியான மொட்டை மாடியில் வைத்து தாராளமாக ஏற்றலாம்.
மஞ்சள் மற்றும் உப்பு கலந்த கோதுமை மாவில் செய்த தீபத்தில் எம தீபம் ஏற்றுவது மிக மிக நல்லது கோதுமை மாவில் தீபம் செய்ய இயலாதவர்கள் சாதாரண அகல் விளக்கில் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்.
எமதீபம் ஏற்றும் பொழுது நல்லெண்ணெய் அல்லது நெய் ,கடுகு எண்ணெய் ஆகியவற்றால் தீபம் ஏற்றுவது நல்லது.
எம தீபத்தை நீங்கள் எப்பொழுதும் தெற்கு திசை நோக்கி தான் ஏற்ற வேண்டும் அல்லது எட்டு திசைகளை நோக்கி விளக்குகள் வைத்து வழிபடுவதும் நல்லது முக்கியமாக எம தீபம் தெற்கு திசையில் இருக்க வேண்டும்.
எம தீபத்தை நீங்கள் தீபத்தின் முன் நின்று ஏற்றக்கூடாது தீபத்தின் பின்னால் நின்று தான் எம தீபம் ஏற்ற வேண்டும். அதேபோல் நீங்கள் எம தீபம் ஏற்றும் பொழுது தீபத்தின் முன்னாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வரக்கூடாது உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் எம தீபம் ஏற்றும் பொழுதும் எறியும் பொழுதும் தீபத்தின் முன் யாரும் சென்ற நிற்கக் கூடாது.
மேலும் படிக்க : கிருத்திகை பௌர்ணமி கூடிய திருக்கார்த்திகை
இவ்வாறு எம தீபம் ஏற்றிய பின் உங்களது முன்னோர்களை சில நிமிடங்கள் நினைத்து மனதார வழிபடுங்கள் அவர்களின் அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
எம தீபம் 2023 ஏற்றிய பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஶ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச வைவஸ்தாய காலாய சர்வ பூத க்ஷயாயச ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே! வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
எம தீபம் 2023 யாரெல்லாம் ஏற்றக்கூடாது?
- எம தீபம் 2023 பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இந்த தீபத்தை ஏற்றலாம்.
- புதிதாக திருமணமான தம்பதிகள் எம தீபத்தை ஏற்றுக் கூடாது.
- கர்ப்பிணி பெண்கள் உடல்நலம் சரியில்லாதவர்கள் எம தீபம் ஏற்றுவது கூடாது.
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் எம தீபம் ஏற்றுக் கூடாது.
- வலியுள்ளவர்கள் , காயம் உள்ளவர்கள் ஆகியோர் எம தீபம் ஏற்றக்கூடாது.
மேலும் படிக்க : Diwali 2023: பல்லடத்தில் பசுமை தீபாவளி 2023
எம தீபம் 2023 ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
- தீபாவளி திருநாளுக்கு முந்தைய நாள் ஏற்றும் எம தீபத்தால் நம் முன்னோர்களின் சாபம் நீங்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடைகிறது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைந்து மணந்தார் நமது குடும்பத்திற்கு பலவித ஆரோக்கியத்தை நமக்கு அருளிச் செல்வார்கள் உங்களது குடும்பத்திற்கு என்றும் பாதுகாப்பாக உறுதுணையாக நமது முன்னோர்கள் இருப்பார்கள்.
- குறிப்பாக விபத்து மற்றும் எதிர்பாராத விதத்தில் துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எம தீபம் ஏற்றுவதால் சாந்தி அடையும்.
- எம தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி குடும்பம் விருத்தி அடையும்.
- குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் உடல் ஆரோக்கியத்துடன் என்றும் வளமாக வாழ்வீர்கள்.