பலமாக இருக்க வேண்டுமா?
பல குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள். இது போன்ற சமயங்களில் மாதுளை பழத்தை கொடுத்தால், அதன் ருசி குழந்தைகளுக்கு பிடிக்கும். வயிறு நிறைந்தால் அடுத்த வேலைக்கு பயணிப்பார்கள். பெற்றோருக்கும் நிம்மதி பிறக்கும்.
- ஆரோக்கியமும், தெம்பும் உண்டாக, புதிய ரத்தம் உற்பத்தியாக.
- எப்போதும் வீட்டில் மாதுளம் பழத்தை வைத்திருக்க வேண்டும்.
- வாந்தி, விக்கல், குமட்டல், மயக்கம், காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், புளியேப்பம் போன்ற தொல்லைகளா?
ரத்தம் உற்பத்திக்கு மாதுளம்
எப்போதும் வீட்டில் மாதுளம் பழத்தை வைத்திருக்க வேண்டும். மாதுளம் பழச்சாற்றில், தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பிறகு தினமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
செரிமானத் திறன் குறைந்தவர்கள், அடிக்கடி மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக உடல் மற்றும் மன உழைப்பால் உடல் சூடும், பித்தமும் கூடி வாந்தி, விக்கல், குமட்டல், மயக்கம், காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், புளியேப்பம் போன்ற தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு இப்பழத்தை தொடர்ந்து உண்ணுவதால் முழுவதும் குணமடையலாம்.
பித்த நோய்க்கு புளிப்பு மாதுளை
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் போன்ற எல்லா வகையான அல்சரையும் குணமாக்கும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் சிறப்பிடம் வகிக்கின்றன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் சக்தி கிடைக்கும். பித்தத்தைப் போக்கி இருமலை நிறுத்துகிறது.
ரத்தம் சுத்தமடைய மாதுளை பூ
மாதுளை சாரை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்குகிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தினமும் காலை 4 மாதுளை பூ சாப்பிட்ட பிறகு பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.
முடி நன்கு வளர மாதுளம் பழ சாறு
புளிப்பு மாதுளம் பழத்தில் இருந்து 3 ஸ்பூன் சாறு எடுத்து தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் அரைத்து விழுதை தலையில் இட்டு தேய்த்து அலச வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் இப்படி குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று முடி நன்கு வளர ஆரம்பிக்கும்.
மாதுளம் பூ
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு. மாதுளம் பூக்களை மைய அரைத்து இரண்டு மடங்கு நீர்விட்டு காய்ச்ச வேண்டும். வடிகட்டிய பிறகு சிறிது தேன் சேர்த்து வாயில் ஊற்றிக் கொப்பளித்து விழுங்க வேண்டும்.
மாதுளம் மொட்டு
இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டை ரணம் குறைகிறது. முத்துக்களைக் கொண்ட மாதுளை பசியை தூண்டி உடலுக்கு சக்தி கொடுக்கும் ஆற்றல் கொண்டவை. மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகுவதால் இருமல் நீங்குகிறது.