பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா..??
இளம் தலைமுறையை வதைக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மனஅழுத்தம். வாழ்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பதற்றமான பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மனஅழுத்தம் ஒரு நோய் என்ற விழிப்புணர்வே மக்களிடம் இல்லை. மன அழுத்தமானது, தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அது மன இறுக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் ஆறு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தனி மனிதனின் மன நலமே உடல் நலம், சமூக நலத்துக்கும் முக்கியமானது.
மன இருக்கத்தின் அறிகுறிகள்
சம்மந்தமே இல்லாமல், பழைய விஷயங்களை ஆராய்ந்து, அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என்று காரணத்தை தேடி குழம்புவார்கள் சிலர், இதனாலேயே மன அழுத்தம் ஏற்படுவதன் பின்னணியில் அழுத்தமான ஓர் ஏமாற்றம், வலி அல்லது கவலையோ இருக்கக்கூடும். இந்த மன அழுத்தமானது கால ஓட்டத்தில் தானாக சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில் மன இறுக்கமாக கூட இருக்கும். இதுதான் சரியான காரணம் என சுட்டி காட்ட முடியாது. சந்திக்கும் ஓவ்வொரு சூழலும், மேலும் மனதை இருக்கமாக்கும்.
இதுதான் மன இருக்கத்தின் அறிகுறிகள். மன அழுத்தத்து க்கு காரணம் தெரியும். ஆனால் மன இருக்கத்துக்கு காரணத்தை கண்டறிய முடியாது. எப்போதோ இழந்த விஷயங்கள், பிரிந்த உறவுகள், நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டுப்போனவர்கள் என ஏதோதோ எண்ண ஓட்டங்கள் மனதை பிடித்து இருக்கும். மன இறுக்கத்தில் இருந்து மீள்வது என்பது அவரவர் மன வலிமையை பொறுத்தது.
எப்படி மீள்வது
ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் சில காலத்துக்கு பின்னர் அதில் இருந்து எப்படி மீள்வது என தேடதொடங்குவர். புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும், அப்போது கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவுகள் மூலம் அழுத்தத்தில் இருந்து எளிதில் வந்துவிடுவர். ஆனால் மன இறுக்கத்துக்கு உள்ளானவர்கள் பல நாட்கள் அந்த பிரச்னையோடு போராடுவர். தனது அன்றாட பணிகளை ஈடுபாடின்றி மேலோட்டமாக செய்வார்கள்.
மன இறுக்கத்தால் பாதிக்க பட்டவர்களால் யாரோடும் சகஜமாக பேச முடியாது, பலர் சூழ்ந்து இருந்தாலும், அவர் தனிமையை உணர்வார்கள். அவர் மன நிலை குறுகும், தன்னம்பிக்கை குறைந்து விடும், வெறுப்பு அதிகரிக்கும், எளிதில் எரிச்சல் அடைந்து கோவப்படுவார்கள். அதே வேகத்தில் மனமுடைந்து போவார்கள். தூக்கம் இல்லாமல் இருப்பது அல்லது அதிக நேரம் தூங்குவது, உடல் எடை குறைவது, யோசிக்காமல் கவனக்குறைவாக இருப்பது, முடிவு எடுக்க முடியாமல் இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் அறிகுறிகள். இது தொடர்ந்தால் மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது.
மனதை தெளிவாக வைத்திருப்பது
நண்பர்களிடம் ஷேர் செய்வது, வீட்டில் உள்ளவர்களிடம் தனது நிலையை எடுத்து கூறி ஆதரவு பெறுவது, ஆரோக்கியமான விஷயங்களை விவாதிப்பது, சரியான நேரத்தில் உணவு சாப்பிடுதல், தினமும் உடற்பயிற்சி யோகா, பிடித்த பாடல்கள் கேட்பது, மனதை தெளிவாக வைத்திருப்பது, தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை படிப்பது போன்றவை அன்றாடம் கடை பிடிக்க வேண்டும். இது போன்ற முயற்சிகளுக்கு பிறகும், வெறுப்பான மனநிலை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
மேலும் படிக்க