நேரத்தை எளிதில் விரல் நுனியில் வைத்துக் கொள்ள டிப்ஸ்
நீங்கள் அன்றாடம் காலண்டர் பார்க்கும் பழக்கம் உடையவர்களா? நம் வீட்டில் சில விஷயங்கள் செய்யும் போது ராகு, எமகண்ட நேரம் பார்ப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் காலண்டரை தேடி தேடி ராகு, எமகண்ட நேரத்தை பார்க்க வேண்டும். சில நேரங்களில் இவற்றை பார்க்க பரபரப்பாக இருக்கலாம். இவற்றை எளிதாக மனப்பாடம் செய்து கொள்வதால் நேரத்தை மிச்சம் செய்யலாம். ராகு எமகண்ட நேரம் அட்டவணை இதோ உங்களுக்காக.
ராகு நேரம்
- திங்கள் : 7.30-9.00
- சனி : 9.00-10.30
- வெள்ளி : 10.30-12.00
- புதன் : 12.00-1.30
- வியாழன் : 1.30-3.00
- செவ்வாய்: 3.00-4.30
- ஞாயிறு : 4.30-6.00.
எமகண்ட நேரம்
- வியாழன் : 6.00-7.30
- புதன் : 7.30-9.00
- செவ்வாய் : 9.00-10.30
- திங்கள் : 10.30-12.00
- ஞாயிறு : 12.00-1.30
- சனி : 1.30- 3.00
- வெள்ளி : 3.00-4.30.
எளிதாக மனப்பாடம் செய்து கொள்வது எப்படி? இதை எப்படி ஈசியாக எழுதி மனப்பாடம் செய்வது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் நாளில் முடியும் நேரமும், அடுத்த கிழமையில் தொடங்கும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்கும். இங்கு வரிசையாக கொடுக்கப்பட்டுள்ள கிழமை அடிப்படையில் மனப்பாடம் செய்வது எளிதாக இருக்கும்.
மேலும் படிக்க : வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அடிப்படை எது!