சமையல் குறிப்புவாழ்க்கை முறை

இட்லி சாப்ட்டா வரவில்லையா

வீட்டில் ஒவ்வொரு முறையும் மாவு அரைக்கும் போது மாவு பதம் மாறும். அதுவும் இட்லி மாவு செய்யும் போது இட்லி சாப்ட்டா வரவில்லை என்ற கவலை இன்றைய லேடிஸ்க்கு உள்ளது. 4 டம்ளர் அரிசிக்கு, ஒரு டம்ளர் உளுந்து அளவு சரியாக இருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற வைத்து தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலந்து நன்றாக கையில் அடித்து வைக்க வேண்டும். இதனால் மல்லிகை பூ போன்ற சாஃப்ட் இட்லியில் கிடைக்கும்.

நாம் உபயோகப்படுத்தும் அரிசிக்கு ஏற்றவாறு இட்லி மாவு பதம் மாறுபடும். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்தை பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு நல்லது. அதோடு கருப்பு உளுந்து மாவு நிறைய பொங்கும். அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக சேர்த்து அரைப்பதை விட, தனித்தனியாக அரைத்து நன்றாக அடித்து வைப்பது மட்டுமே இதன் ரகசியம்.

பாரா பாயில்ட் அரிசி அல்லது இட்லி அரிசி கடைகளில் விற்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். நாம் அரைக்கும் இயந்திரங்களைப் பொருத்தும் இட்லியின் தன்மை மாறுபடும். ஆட்டுக்கல்லில் அரைத்து இட்லி சுட்ட காலமும் உண்டு. தற்போது கிரைண்டரில் அதிரடியாக அரைத்து நன்றாக அடித்து வைப்பதால் மாவு புளித்து விடும். மாவு நைஸாக அரைக்க கூடாது.

நைசான பதத்திற்கு முன்பு மாவை எடுத்து விட வேண்டும். கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் விடக்கூடாது. இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது தண்ணீர் சிறிது, சிறிதாக தெளித்து விட்டு அரைக்க சாப்டாக வரும். உளுந்தை அரைத்ததும் சிறிது எடுத்து தண்ணீரில் போட்டால் உளுந்து மாவு மிதக்க வேண்டும். இட்லி மாவுக்கு உளுந்து அரைக்கும் பதம் இது தான். இந்த அளவில் இட்லி மாவு அரைத்து சுடசுட இட்லி, ஆனியன் சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னி கொண்டு பரிமாற சுவையே தனிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *