செய்திகள்வணிகம்வாழ்க்கை முறை

வீட்டிலிருந்தே தங்கம் வாங்கத் தயாரா!

கடை இல்லையே சார்! என்று வருத்தப்படும் மக்கள் இந்தப் பதிவை படித்து உங்களின் காசுகளை பொற்காசுகளாக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆமா இன்னிக்கி என்ன விசேஷம்னு தெரிஞ்சுப்போமா!

அக்ஷய த்ரிதியை

சித்திரை மாதம் வளர்பிறை த்ரிதியை திதியான இன்று அக்ஷய த்ரிதியை நன்னாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் வாங்கும் எந்த பொருட்களும் பன்மடங்காக உயர்ந்து நம் வீட்டிலேயே தங்கும் அளவிற்கு பிரசித்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

மக்களிடையே பணப்புழக்கம் இருந்தாலும் இல்லாவிடினும் நகைக்கடைகள் அக்ஷய த்ரிதியை அன்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். இந்த ஒரே காரணத்தை தங்க வியாபாரிகள் நன்றாக பயன்படுத்துகின்றனர்.

அக்ஷய த்ரிதியை என்று கூறியவுடன் நம் நினைவுக்கு வருவது தங்கம் வாங்குவது. நகைக்கடைகள் அக்ஷய த்ரிதியை பெரிதாக விளம்பரப்படுத்துகின்றனர். இவர்கள் விளம்பரப்படுத்துதலிலேயே மக்களுக்கு பேராசை ஏற்படுகிறதா இல்லை மக்களின் பேராசையை இவர்கள் விளம்பரத்திற்கும் உபயோகப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. எப்படி இருந்தா என்னங்க இன்னிக்கி தங்கத்த எப்படியாச்சு வாங்கிடனும்.

அப்போ பணமில்லாதவங்க!

அனைவரிடமும் நகை வாங்கும் அளவிற்கு வசதி இருக்கும் என்ற சூழல் இன்னும் நிலவவில்லை ஆனால் அக்ஷய த்ரிதியை அன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கினால் பிற்காலத்தில் நாம் செல்வந்தராவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர் எவரும் இல்லை.

இதுதான் உலகம்

ஒரு கொடுமையான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நிலைமையை மறந்து இன்று அக்ஷய த்ரிதியை எங்கு எப்படி நகை வாங்க முடியும் என்று யோசிக்கும் கூட்டம்தான் அதிகம். அவர்களுக்கான பதில் இதோ,

இணையதளம் இருக்க பயமேன்!

தங்கத்தைப் பெறும் வழிகள்

  1. ஆபரண தங்கம்
  2. தங்கக் காசுகள் (கோல்ட் காயின்ஸ்)
  3. கோல்ட் பார்
  4. டிஜிட்டல் கோல்ட்
  5. தங்க பத்திரங்கள் (சாவரின் கோல்ட் பான்ட்ஸ்)
  6. இ-தங்கம்
  7. கோல்ட் இடிஎஃப் (ஷேர் மார்க்கெட்)

தங்கம் வாங்க தயாராயிட்டிங்களா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *