தயிரை எப்படி சாப்பிட வேண்டும்..?
தமிழக வெப்ப மண்டலபகுதி என்பதால் பெரும்பாலனவர்கள் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தயிரை எப்படி சாப்பிட வேண்டும் என என சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதை பார்க்கலாம்
சில சமயங்களில் தயிர் நன்கு உறையாமல் இருக்கும். அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும். அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும். இதனால், நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது. மண் சட்டியில் தயிரை உறைய வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நன்கு கெட்டியாகவும், தேக ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும்.
தயிரை சுடவைத்து சாப்பிடலாமா..?
தயிரை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். எண்ணெயில் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல. மேலும், உடல் எடையை கூட்ட வேண்டும் என விரும்புபவர்கள், வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய்த் துவையலுடன் தயிர் சாப்பிடலாம். உறைந்த தயிரின் காணப்படும் தெளிந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்