வெட்ட வெட்ட முளைக்கும் வெட்டுக்கிளிக்கு இதுதான் தீர்வு
படுத்தி எடுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் வேதனையில் வாடும் விவசாயிகள், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து பயணத்து இந்தியாவில் புகுந்து உள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது ஏமன் கென்யா போன்ற நாடுகளில் பெரிய அளவில் இம்சித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் திணறுகின்றனர். ராஜஸ்தானில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பாலைவன வெட்டுக் கிளிகள் பறந்து வந்து பயிர்களை நாசம் செய்கின்றன.
இதனால் விவசாயிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. ஏற்கனவே நாட்டிலுள்ள விவசாயிகள் நிலைமை திண்டாட்டம்தான், அவர்கள் கடினமாக உழைத்தாலும் உற்பத்திக்கு ஏற்ற விலை இல்லை, என ஒரு வேதனைகள் இருக்கின்றனர். பற்றாக்குறைக்கு வெட்ட வெட்ட முளைக்கும் வேலிப் பயிர் போல இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் படுத்தும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதற்கு என்னதான் முடிவு, என்றால் உடனடியாக அதற்கும் நமக்கு முடிவு கிடைக்காது என்பதைவிட தெரிவதில்லை என்பது தான் உண்மை. ஆனால் இது போன்ற பூச்சி தொல்லைகள் ஏற்படும்போதெல்லாம் நமது முன்னோர்கள் அனுபவ விவசாயிகள் பயன்படுத்திய வழிமுறைகள் இன்னும் நம்மை விட்டு மறைய வில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
ராஜஸ்தான் பகுதியில் வேப்பிலை மற்றும் எண்ணெய் வைத்து அந்த கசப்புகள் மூலம் செடிகளை விரட்டலாம். மருந்து தெளித்து வருகின்றனர். இதையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று முயன்று வருகின்றனர் ஆனால் இந்த பாலைவன வெட்டுக்கிளியின் வேகத்தை குறைக்க முடியுமே தவிர அதனை விரட்ட முடிவதில்லை. என்ற தகவலும் கிடைக்கின்றன இதற்கு என்னதான் முடிவு என்று யோசித்துப் பார்த்தால் நமது முன்னோர்கள் பெரியோர்கள் சொல்லிவிட்டு இன்று நினைவில் வருகின்றது இந்த இக்கட்டான சூழ்நிலை அவர்கள் செய்திகள் மூலம் கண்டு வருகின்றனர் அப்போது இந்த தகவலை நாம் பெற்றோம்
படுத்தும் பாலைவனம் வெட்டுக்கிளிகளை வேரோடு பிடுங்க மிள்காய்ச் செடிகள் இருக்கின்றது. இதனை நாம் எளிமையாக செய்யலாம் பாலைவன வெட்டுக்கிளி அட்டகாசத்தை தடுத்து நிறுத்த காய்ந்த மிளகாய்ச் செடி போதும். அதனை பயிர்களுக்கு அருகில் நெருப்பில் பற்றவைத்து புகை வர வைத்தால் அடியில் உள்ள அந்த நிலையின் காரணமாக பாலைவன வெட்டுக்கிளி படுவேகமாக இடம் பெயர்கின்றன, இறந்து போகின்றன மீண்டும் அங்கு வருவதில்லை என்ற தகவல்கள் திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா மூலம் தமக்கு கிடைத்துள்ளது.
இந்த தகவலை ஹீலர் பாஸ்கர் அவர்கள் வர்மக்கலை நிபுணர் 62 வயது மதிக்கத்தக்க பெரியவரிடம் பெற்றுள்ளார் அதனை அவர் பகிர்ந்துள்ளார் மிளகாய் செடி இல்லை அதுவும் காய்ந்த செடிகள் இல்லை என்ற கவலை வேண்டாம். தோட்டத்தில் இருக்கும் புற்கள் காய்ந்த புற்களை எடுத்து அதன் மீது எண்ணெய் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கிய கலவையை அந்த காய்ந்த பொருட்களின் மீது நன்று தடவி புகைமூட்டம் கொண்டுவரலாம்.
இந்த நெடி பரவி வெட்டுக்கிளிகள் அட்டகாசத்தை வேரோடு நிறுத்தும். மீண்டும் வர இயலாதபடி அந்த மிள்காய் நெடியை கொண்டு தடுக்கலாம் இச்செய்தியை விவசாயிகளுக்கு அறிவிக்கவும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை நீங்கள் விவசாயியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தகவலை அனைவரிடமும் பகிருங்கள் விவசாயத்தை வளம் கொழிக்கச் செய்வோம். எந்த ஒரு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் வையகத்தை காப்போம்.