டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை!

விண்ணப்பம் :குரூப் ஒன் தேர்வு எழுதுவோர் கவனிக்கவேண்டியவை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க இயலும். குருப் ஒன் தேர்வு எழுதுவோர் முதண்மை தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். முதன் முறையாக தேர்வு எழுதுவோர் டிஎன்பிஎஸ்சியின் பதிவுகட்டணம் ரூபாய் 150 சேர்த்து செலுத்த வேண்டும். ஒருமுறை செலுத்தினால் போதுமானது பதிவுகட்டணம் செலுத்தி தேர்வாளர்கள் தங்களுக்கான இணைய முகவரி மற்றும் கடவுசீட்டு என அழைக்கப்படும் பாஸ்வோர்டு உருவாக்கிகொள்ளலாம்.

ஐந்து வருடம் மட்டுமே உபயோகிக்கலாம் பிறகு வேண்டுமெனில் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தி பெற வேண்டும், இணைய முகவரியும் புதிதாக பெற வேண்டும். ஆன்லைன் மற்றும் அஞ்சல், வங்கி செலான் மூலமும் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க தொடக்க தேதி, விண்ணப்பிக்க இறுதி நாள், கட்டணம் செலுத்த இறுதிதேதி மற்றும் தேர்வு நாள் போன்ற விவரங்கள் அனைத்தும் தேர்வு அறிவிக்கையான நோட்டிஃபிகேசனில் அறிவிக்கப்பட்டிருக்கும். எஸ்சி என அழைக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர், மலைவாழ்(எஸ்டி) மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மட்டுமே விண்ணபிக்க சலுகையுண்டு மற்ற பிரிவினர்கள் மூன்று வாய்ப்புகள் மட்டுமே கட்டண சலுகையுண்டு. மூன்று வாய்ப்புகள் உபயோகித்தவர்கள் பின் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் . 

விண்ணப்ப விவரங்கள் :

பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, இந்தியன் மற்றும் கல்வித்தகுதி தொடங்கி திருமணமானவரா போன்ற தகவல்களுடன் சாதி, மதம், முகவரி, விண்ணப்பத்தாரர் விரும்பும் பதவி, விண்ணப்பதாரர் ஊனமுற்றவரா அல்லது பெண் விண்ணப்பத்தாரரெனில் விதவை மற்றும் கணவனை பிரிந்தவரா என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு படையில் பணியாற்றியவரா என்பதை அறிவிக்க வேண்டும். அத்துடன் காவல் துறை ஆணையர் பதவிக்கு முன்னுரிமைத் தருவோர் தங்களது உடல் தகுதி மற்றும் கண் பார்வை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

சான்றிதழ் எண் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதிகள் போன்ற தேவைப்படும் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் விண்ணப்பத்தாரர் ஏதேனும் இயக்கம் மற்றும் கட்சியை சேர்ந்தவரெனில் அறிவிக்க வேண்டும் அத்துடன் எந்த ஒரு வழக்கிலும் பங்குகொண்டு முதண்மை நடவடிக்கையென அழைக்கப்படும் (எஃப்ஐஆர் ) சந்தித்தவரா என்பதை உறுதி செய்ய வேண்டும். இறுதியாக தேர்வு எழுதும் இடம் போன்ற தகவல்கள் கொடுத்து விண்ணப்பத் தகவல்களுக்கு உறுதி கொடுத்து சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையொப்பம் நகல் இணைக்க வேண்டும். அதன்பின் பதிவு நம்பர் கிடைக்கும் அவற்றை சேமித்து அட்மிட் கார்டு பெறும் போது பயன்படுத்தலாம். மேலும் விண்ணப்ப இணைப்பு இங்கு இணைக்கப்பட்டுள்ளது அறிவிப்பிற்கேற்ப அதனை பயன்படுத்தவும். பொதுதேர்வுக்குத் தயாரவோர் அதனைப் பயன்படுத்திகொள்ளலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

குருப் ஒன் பதவிகள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை மாவட்ட பஞ்சாய்த்து அலுவலர் முதல் மாவட்டத்துணை ஆட்சியர் வரை பல்வேறு துறைகளை தன்னகத்தே கொண்டது குருப் ஒன், குருப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி வழங்குதலில் சில வழிமுறைகள் உண்டு. குருப் ஒன் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்களுக்கான பதவி வாய்ப்புகள் அறிந்திருத்தல் அவசியம் ஆகும். குருப் ஒன் தேர்வு மாவட்ட ஆட்சியர் (டிசி),காவல்துறை ஆணையர்(டிஎஸ்பி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வருமான வரி அலுவலர், மாவட்ட தணிக்கைத்துறைத்தலைவர், பிற்ப்படுத்த்ப்பட்ட மக்கள் நல்வாழ்வு செயலர் மற்றும் மாவட்டப்பதிவாளர் என துறைகள் உள்ளன.

இவற்றில் மாவட்ட ஆட்சித்துறைத்தலைவர் பதவி தேர்வில் வெற்றி பெற்றவர் உடனே அமர இயலாது மூன்று வருடம் துணை மாவட்ட ஆட்சியாளராகவோ மற்றும் அரசு தரும் அது சார்ந்த துறைகளில பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றியப்பின் அவர் அடுத்த படிநிலையான மாவட்ட ஆட்சியாளராக பதவியில் அமர்வார் இது அனைத்து பதவிக்கும் பொருந்தும். இவ்வாறு ஒவ்வொரு துறைசார்ந்த குருப் ஒன் பதவிகளுக்கும் பயிற்சி காலங்கள் பதவிகளில் பணியாற்ற வேண்டும். இவற்றில் படிப்படியான உயர்நிலைகள் உண்டு.

டிசி பதவியானது செயலர் மற்றும் அரசு சார்ந்த துறை செயலர் பதவி வரை செல்லும். மற்றும் குருப் ஒன் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு துறையும் இவ்வாறு பயிற்சி காலம் அந்ததந்த பதவிக்கேற்றார் போல் இருக்கும். மேலும் அந்தந்த பதவிகளுக்கு பதவி உயர்வானது கிடைக்கும். குரூப் ஒன் பதவிகளுக்கான லிங்குகள் இங்கே கிடைக்கும்.

முன்னுரிமை:

டிஎன்பிஎஸ்சி தனது குருப் ஒன் அறிக்கையில் சில பதவிகளுக்கு படிப்பு முன்னுரிமை கொடுத்துள்ளது. இது டிஎஸ்பி போன்ற காவல்துறை ஆணையர் பதவிகளுக்கு கிரிமினாலஜி முடித்தவர்களுக்கு முன்னுரிமை தந்துள்ளது இவ்வாறே கமர்சியல் டேக்ஸ் ஆஃபிசர் வரி ஆணையர் போன்ற பதவிகளுக்கு கமர்சியல் லா, கம்ர்சியல் லா வித் டேக்ஸேசன் முடித்தவர்களுக்கு வழங்குகிறது. மேலும் இது வேலை வாய்ப்பு அலுவலர் பதவிகளுக்கு பொருளாதாரம், சமுகவியல் அல்லது புள்ளியல, உளவியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் முதுநிலை சமுகவியலில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *