கந்த சஷ்டி ஒருநாள் விரதம்(18.11.2023) எவ்வாறு இருக்க வேண்டும்? ஏழு நாட்களின் பலன் இந்த ஒரு நாள் விரதத்தில்
கந்த சஷ்டி விரத விழாவின் ஆறாம் நாளான என்று முருகன் அசுரனை வதம் செய்து தேவர்களைக் காத்த சூரசம்ஹாரம் நாளாகும். கந்த சஷ்டி விரதம் ஏழு நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று ஒரு நாள் விரதம் இருந்தாலே ஏழு நாட்கள் இருந்ததற்கான முழு பலனும் கிடைக்கும். சஷ்டி திதியில் வரும் சூரசம்ஹார தினத்தன்று கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று (18.11.2023) விரதம் இருந்தால் முருகனின் முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
கந்த சஷ்டி ஒருநாள் விரதம் இருக்கும் முறை
கந்த சஷ்டியின் ஒருநாள் விரோதமான இன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு காப்பு கட்ட நினைப்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஏதாவது முருகன் கோவிலுக்கு சென்று கோவிலில் வைத்து காப்பு கட்டிக்கொண்டு கோவிலில் முருகனை மனதார நினைத்து வழிபட்டு நீங்கள் வேண்டும் காரியத்தை முருகனிடம் கூறிவிட்டு இன்றைய விரதம் எந்த தடங்கலும் இன்றி இருக்க வேண்டும் என்று கூறி உங்களது விரதத்தை கோவிலில் இருந்தே தொடங்கலாம். காப்பு கட்டும் நிறம் ஆனது அதிகாலை 6:00 மணிக்கு முடிந்துவிட வேண்டும்.
கந்த சஷ்டி ஆறாம் நாள் விரதம் 2023
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு உங்களது பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படம் அல்லது விக்ரகம் இருந்தால் அதற்கு மாலையிட்டு சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும் அதன் பின்பு தீபாரதனை காட்டி வழிபட்டு முருகனின் படத்திற்கு முன்னால் உங்களது காப்புக்கயிறு கட்டிக் கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை உங்களது பூஜை அறையில் சட்கோன கோலம் போட வேண்டும் அதில் ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் தெய்வத்திற்கு நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். காலை மாலை ஆகிய இரண்டு வேலையும் ஷட்கோண கோலத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கந்த சஷ்டி விரதம் 2023 இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?
கந்த சஷ்டி விரதம் ஆறாவது நாளான முருகனின் சூரசம்ஹார தினத்தன்று இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் விரதம் தொடங்கி விரதத்திற்கு முன்பு தண்ணீர் மட்டும் குடித்து விரதத்தை தொடங்கலாம் இன்றைய தினம் முழுவதும் தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பது நல்லது. ஆனால் புதிதாக குழந்தை பெற்றவர்கள் வயதானவர்கள் அல்லது ஏதாவது ஒரு நோயின் காரணமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் ஆகியோர் தங்களின் உடல் நலனுக்கு ஏற்ப பால் பழம் ஆகிய ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் அதனால் எந்த தவறும் இல்லை தண்ணீர் மட்டும்தான் குடித்து விரதம் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை உங்களின் உடல் நிலையை பொறுத்து நீங்கள் ஏதாவது பால் அல்லது பழம் மட்டும் சாப்பிட்டு விட்டு விரதத்தை தொடங்கலாம்.
கந்த சஷ்டி ஒரு நாள் விரதம் நிறைவு செய்யும் முறை
கந்த சஷ்டியின் ஆறாம் நாளான இன்று விரதம் இருப்பவர்கள் என்று நாள் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருந்து மாலை வேளையில் முருகனின் சூரசம்ஹார நிகழ்வு முடிந்தவுடன் முருகனுக்கு தீபமேற்றி சர்க்கரை பொங்கல் தயிர் சாதம் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து நீங்கள் எதற்காக வேண்டி விரதம் இருந்தீர்களோ அதனை கூறி மனதார வழிபட்டு அதன் பின்பு உணவு உட்கொண்டு உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம் முருகனின் சூரசம்ஹார தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டவர்களுக்கு முருகனின் பூரண அருளும் கிடைக்கும் நீங்கள் மனதில் நிறைந்த காரியம் விரைவில் நிறைவேறும்.