செய்திகள்தமிழகம்தேசியம்

ஜெய்ஹிந்த் போராடி வாங்கிய சுதந்திரத்தின் அடையாளமாக தேசியக் கொடி உருவாக்கப்பட்டது

இந்தியா சுதந்திரம் அடைந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் உள்ள கோட்டை கொத்தளத்தில் இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஆங்கிலேயர் கொடியை இறக்கி விட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் இந்திய தேசியக்கொடியை ஏற்றுவார்கள்.

இந்திய தேசிய கொடிக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நாட்டு சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை மறவாமல் நம் தேசத்தையும், நம் தேசிய கொடியையும் காப்போம்; போற்றுவோம். 1947 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இந்திய தேசிய கொடியின் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன.

வடிவமைத்த கொடியை இந்திய தேசிய கொடியாக அந்த அமைப்பு அறிவித்தது. இந்திய தேசியக்கொடியின் மையப்பகுதியில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் உள்ளன. இது தர்மம் காக்கப்படவேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளன. சிறப்பு வாய்ந்த இந்திய தேசியக்கொடி உருவானதற்கு பின் ஒரு பெரிய வரலாற்று கதை ஒன்று உள்ளது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ராஜேந்திர பிரசாத் தலைமையில் அபுல்கலாம் ஆசாம்,சரோஜினி நாயுடு, அம்பேத்கர் ஆகியோர் கொண்ட ஒரு அவசர அமைப்பு அமைக்கப்பட்டன.

சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு கொடி வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பல கொடிகள் உருவாக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 22 முறை இந்திய கொடியானது மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக ஒரே அளவில் காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடி வேண்டும் என்று இந்த அமைப்பு முடிவு செய்தன.

மூவர்ணத்தாள் ஆன இந்தக் கொடி காவி பலத்தையும், தைரியத்தையும்; வெள்ளை உண்மையையும், அமைதியையும்; பச்சை விவசாயத்தையும், வளர்ச்சிப் பாதையையும் குறிக்கின்றன. மூன்று கலர்களை கொண்டு உள்ளதால் இவற்றை மூவர்ணக்கொடி என்று அழைத்தார்கள்.

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் துணிச்சலுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் தான் காரணம். இந்திய நாட்டிற்காக உயிரை விட்ட தியாகிகளைப் போற்றும் வகையிலும் உருவானது தான் இந்த தேசியக் கொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *