எவ்வளவு மணி நேர தூங்கனும் பாஸ்?
பெருந்தொற்றைவிட கொடுமையானது
கொரோனா என்பது இன்று வந்த பிரபலமான தொற்றே! ஆனால் மனிதனுக்கு ஆசை பிறந்த காலம் முதல் பெரும்பாலும் பகிரப்படாத ஒரு பெருந்தொற்று ‘தூக்கமின்மையே’. அதிலும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுபவர்கள் நம்மிடையேதான் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.
எவ்வளவு மணி நேர தூக்கம்?
ஒரு மனிதன் பொதுவாக 8 மணி நேர தூக்கத்தில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து. ஆனால் சில ஆபூர்வ மனிதர்களின் வரலாற்றை எடுத்து பார்த்தால், தொடர்ந்து இருபத்தி ஐந்து வருடங்களாக தூங்காமல் இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வியக்கத்தக்க விசயமே. இது எப்படி சாத்தியம் என்னும் ஆராய்ச்சிக்குள் போகாமல் ஒரு மனிதனுக்கு உண்மையில் எவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
நீங்களே முடிவு செய்ய வேண்டும்
ஒரு மனிதரின் தூக்கத்தை முடிவு செய்ய வேண்டியது அவரவரின் உடல் மற்றும் மனமே தவிர, மருத்துவர்களோ, உளவியல் நிபுணர்களோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் உடலின் உழைப்பு, மனதின் இயக்கம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் என்பது இயற்கையின் சட்டம். இப்படிப்பட்ட இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப உடலையும் மனதையும் இயங்கவிட்டால் அதுவே ஆரோக்கியத்திற்கான முக்கிய பங்கை அளிக்கும் என்பதில் எவ்வித ஆச்சிரயமும் இல்லை. ஒரு நாள் இரண்டு மணி நேரம் நம் உடல் உறக்கம் கேட்கலாம் அல்லது பத்து மணி நேரம் கூட உறக்கம் கேட்கலாம். அந்தந்த நாட்களின் வேலை பளுவிற்கு ஏற்ப தூக்கத்தை கொடுக்க வேண்டியது நம் கடமை.
தூக்கத்தில் மிச்சம் வைக்காதே
உதாரணமாக ஒரு நாள் திடீரென நம் உடல் பத்து மணி நேரம் தூக்கம் கேட்கிறது. அப்பொழுது நேரமின்மை காரணமாக, எட்டு மணி நேரம் மட்டுமே உறக்கம் கொடுக்க இயல்கிறது. மீதம் உள்ள இரண்டு மணி நேர தூக்கமானது உடலில் ஓர் கழிவாக,”ராஜ உறுப்புகள்” என்று சொல்லக்கூடிய மூளை, நுரையீரல், இருதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் கழிவாக தேங்கிக்கொள்ளும். பிற உறுப்புக்களை தூய்மை செய்யும் நேரத்தைவிட ராஜ உறுப்புக்களை தூய்மை செய்வதற்கான நேரம் சற்று அதிகமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆதலால் அன்றன்று தேவைப்படும் உறக்கத்தை முறையாக கொடுக்க வேண்டியது நம் கடமை