உங்கள் சண்டே ஸ்பெஷல் ஆக மாறணுமா
வேலையே இல்லாமல் இருந்தாலும் சண்டே அன்று ஓய்வு எடுப்பது என்பது கூடுதல் சிறப்பு. சண்டே வரப்போகும் நாட்களுக்கு தேவைப்படும் சின்னச் சின்ன வேலைகளை முடித்து விட்டால் அந்த வாரம் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். சண்டே ஸ்பெஷல் சண்டே வாகவும், உபயோகமான நாளாக மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம். சண்டே வந்தாலே நாள் முழுவதும் நண்பர்களுடன் செலவழித்துவிட்டு சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் பழக்கமே இங்கு பலருக்கு உள்ளன.
சண்டே கூட அலுவலக பணி என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவார்கள். இது இரண்டுமே தவறான பழக்கம் தான். குடும்பத்தினருடன் இருப்பது போல நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். அவர்களும் அவர்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் அல்லவா. இதை கவனத்தில் கொள்ளுங்கள். சண்டே என்றாலே சாப்பிடத்தான் என்ற எண்ணம் பலரும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். உண்மை தானே.
உங்களுக்கு பிடித்த உணவை பிடித்த அளவு சாப்பிட வேண்டும் என்பதற்காக இருக்கும் இடத்திற்கு உணவு வரவேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். சண்டே ஒருநாளாவது மனைவிக்கு சமயலறையில் இருந்து விடுதலை கொடுங்கள். அவர்களுடன் சேர்ந்து சமைக்க முயலுங்கள். உங்களுக்கு சமையல் தெரியும் எனில் நீங்களே சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறுங்கள். இவை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
சண்டே தொடங்கும்போது இருக்கும் உற்சாகம் அது முடியும்போது இருப்பதில்லை. காரணம் அடுத்த நாள் முதல் மீண்டும் இயந்திரமாய் செயல்பட வேண்டும். இதில் முக்கிய கவலை காலை எழுந்ததும் உணவை சமைப்பது. உணவை சமைக்க தேவையானவற்றை திட்டமிட்டு வையுங்கள். திங்கள்கிழமை டென்ஷன் இல்லாமல் வரவேற்க தயாராக வேண்டும்.
ஷாப்பிங் பால் மற்றும் காய்கறிகள் தவிர ஏனைய அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஷாப்பிங்கயே ஒரு சண்டையில் முடித்துவிடலாம். இல்லையெனில் அடிக்கடி கடைக்கு ஓட வேண்டியிருக்கும். வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைத்து விடுவது ஆகச்சிறந்த புத்திசாலித்தனம்.
உங்கள் பர்ஸில் பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருக்கும் பஸ் டிக்கெட், ஹோட்டல் பில், வாரம் முழுவதும் சேமித்து வைத்த பல தேவையில்லாத பொருட்களை உங்கள் பர்ஸில் பொக்கிஷம் போல வைத்திருப்பீர்கள். இவற்றை முதலில் தூக்கி எறிந்து பர்ஸில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சண்டே காலையில் ஒரு சூப்பர் காபியை குடித்துவிட்டு இந்த வேலைகளை எல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உங்கள் வீட்டின் பிரிட்ஜை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த வாரம் முழுவதும் ஃப்ரிட்ஜை பற்றி கவலைப்பட தேவை இருக்காது. வாரம் முழுவதும் வேலை செய்யும் உங்கள் மனைவிக்கு சண்டே ஒரு நாளாவது இதுபோன்ற உதவி செய்து ஓய்வு கொடுப்பதால்
உங்களின் மரியாதையும், அவர்களிடம் உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சண்டே ஒரு நாள் தானே ஓய்வு என்பதற்காக பகல் முழுவதும் தூங்காமல் சனிக்கிழமை இரவு சீக்கிரம் தூங்கச் சென்று அதிகாலை பொழுதில் எழுந்து உங்கள் நாளை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் செலவழிக்கலாம்.