கடை ஸ்டைலில் கம கம தக்காளி சட்னி
நல்ல பசியில் இருக்கும் போது ரோட்டுக் கடையில் சாப்பிடும் போது அதன் சுவையே தனி தான். தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் சட்டினியில் தக்காளி சட்னியும் ஒன்று. ரோட்டு கடைகளில் விலை குறைவாக இருந்தாலும் உணவின் சுவையில் குறை இருக்காது. இந்த சட்டினி வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
- தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் சட்டினியில் தக்காளி சட்னியும் ஒன்று.
- ரோட்டு கடைகளில் விலை குறைவாக இருந்தாலும் உணவின் சுவையில் குறை இருக்காது.
- இந்த சட்டினி வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
தக்காளி 5, கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உளுந்து ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, எண்ணெய், உப்பு தேவையான அளவு. காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, தாளிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். பிறகு கடைசியாக கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
சட்னியில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். சுவையான தக்காளி சட்னி இட்லி, தோசைக்கு ஏற்றதாக இருக்கும். மிகவும் எளிமையான இந்த சட்னியை நீங்களும் செய்து பாருங்க. பார்த்தாலே நா ஊறும் இந்த தக்காளி சட்னி. இந்தச் சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அட அடடா.. என்னம்மா டேஸ்ட்.. இன்னும் வேணும்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க.