Egg rice in home: ஹோட்டல் ஸ்டைல் முட்டை சாதம் இனி வீட்டிலேயே..
அனைவரும் வீட்டில் சமைத்த உணவுகளை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் உணவு தான் விரும்புவர். அதிலும் சில உணவுகளை கண்டிப்பாக வீட்டில் சமைக்க மாட்டோம். அந்த ரெசிபி சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே உடனே ஹோட்டலுக்கு சென்று விடுவோம். அதில் ஒன்றுதான் முட்டை சாதம் வீட்டிலேயே எளிய முறையில் அதனை ஹோட்டல் ஸ்டைலில் செய்துவிடலாம். ஆனால் நாம் அனைவரும் முட்டை சாதத்திற்காக ஹோட்டலுக்கு செல்கிறோம்.இனி அந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே எல்லாருக்கும் புடிச்ச மாதிரி ஹோட்டல் ஸ்டைல் முட்டை சாதம் எப்படி செய்வது என்று ஒரு சில டிப்ஸ் உங்களுக்காக…
தேவையான பொருட்கள்
முட்டை – 6
சாதம் – 2 கப் ( உதிரியாக வடித்தது)
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய் – 4
நெய் – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
முட்டை சாதம் செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் சிறிது பொன்னிறமாக வதங்க வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதனை பொன்னிறமாக வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். முட்டை வருத்த பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின்பு உதிரியாக உள்ள சாதத்தை போட்டு நன்கு கிளறி விடவும்..கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை சிறிதளவு போட்டு இறக்கி விடவும்..
அவ்வளவுதான் சூடான ஹோட்டல் ஸ்டைல் முட்டை சாதம் ரெடி… இரவு டின்னராக இந்த சாதத்தை செய்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும். ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டால் இன்னொரு முறை ஹோட்டலுக்கு செல்ல மாட்டீர்கள்.