ஓரை செயல்பாடுகள் பயன்கள்
ஓரையின் பலன்கள் ஒவ்வொன்றாக நாம் அறிவோம். ஓரை அறிந்து செயல்படுவோருக்கும் என்றுமே வெற்றி மட்டுமே கிடைக்கும். ஏழு கிரக ஓரைகள் நேரம் ஒரு நாளில் சூரிய உதயத்தில் தொடங்கி அடுத்த நாள் காலை சூரிய தொடக்கம் வரை மாரி மாரி 1 மணி நேரம் கிரகங்கள் ஆட்சி செலுத்தும் நேரங்கள் தெரிந்து நாம் செயல்களில் ஈடுபடும் பொழுது நமக்கு வெற்றி கிடைக்கும்.
சூரிய ஓரையில் எந்த காரியங்கள் செய்தாலும் அது நன்மையாகவே முடியும் உயிர் எழுதுவது வீடு சம்பந்தப்பட்டவை வாகனங்கள் பதிவு செய்வது அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்வதற்கும் மலக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சிக்க மேலதிகார்களை சந்திக்க ஆகிய காரியங்கள் சூரியகாரியில் செய்யலாம் புதிதாக நாம் எந்த ஒரு அலுவல்களையும் ஒப்பந்தங்களையும் செய்வது நல்லது கிடையாது சூரிய ஓரையில் இதை செய்யாதீர்கள் மேலும் சூரிய ஓரையில் எப்பொழுதும் வீடு குடி போகவும் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுக்கிர ஓரை
சுக்கிர ஓரையில் என்ன காரியங்கள் செய்தாலும் நன்மை வரும் என்று சொல்வார்கள். ஆனால் சுக்கிர ஓரையில் பெண்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் செய்வதற்கு உகந்தது நல்ல காரியங்கள் செய்யலாம். சுக்கிர ஓரை நல்ல காரியங்கள் செய்ய மட்டுமே பயன்படுத்துதல் நல்லது. வீடு, நிலம் வாகனம், ஆடை, விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கு இது சிறந்தது ஆகும். மேலும் இதுபோன்ற பொருட்கள் வாங்கும் போது நன்மையில் முடியும் சூரிய சுக்கிர ஓரையில் விவசாயம் பணம் பயணம் போன்ற பரிமாற்ற காரியங்கள் செய்வது சிறந்தது
புதன் ஓரை
புதன் ஓரையில் சாகசங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் செய்வதற்கு உகந்தது ஆகும். கல்வி கடவுள் புதன் ஆகையால் கல்வி எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் புதன் ஓரையில் செய்யலாம்.
சந்திர ஓரை
சந்திர ஹோரையில் வளர்பிறை நாட்கள் சந்திர ஹோரை நல்ல கோரை என்று சொல்பப்பட்டுள்ளது. சந்திர ஹோரையில் கல்யாணம், வளைகாப்பு, பெண் பார்ப்பது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, காது குத்துவது, வேலைக்கு விண்ணப்பிப்பது, பதவி ஏற்றுக்கொள்வது, வங்கி கணக்கை தொடங்குவது போன்ற நல்ல காரியங்கள் செய்வதற்கு சிறப்பான நாள் என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திர ஹோரையில் பெண்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்யவும் நல்ல நாளாகும் தொழில் சம்பந்தமாக யாத்திரை மேற்கொள்ளவும் இந்த சந்திர ஹோரை மிகவும் உகந்ததாகும்
சனி ஓரை
சனி ஹோரையை பொறுத்தவரை ஒரு சில நல்ல காரியங்கள் செய்யலாம் அது ஓரளவுக்கு அமைதியாக முடியும் அதாவது பூர்வ ஜென்ம பாவங்கள் தீர்க்க பாதயாத்திரை செல்வது, நடைப்பயணம் துவங்குவதற்கும், விருட்சங்கள் அமைக்கவும், மரக்கன்று நடவும், அணைக்கட்டு நீர்மாணிக்கவும், பணிகளை துவங்கவும் இந்த சனி ஹோரை மிகவும் உகந்தது ஆகும். சனி ஓரையில் கடன் அடைப்பது சிறந்தது ஆகும்.
குரு ஓரை
குரு ஹோரையில் நாம் செய்யும் காரியங்கள் நன்மைகளில் முடியும். அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்யலாம். வியாபாரம், விவசாயம் சார்ந்த அனைத்து செயல்களையும் செய்ய இது உகந்ததாகும். ஆபரணங்கள், வீடு வாங்கலாம், விற்கவும் ஏற்ற கோரை என்றால் அது குரு ஹோரை என்று சொல்வார்கள். குரு ஹோரையில் நேர்மையற்ற காரியங்கள் செய்வதாக இருந்தால் செய்யாமல் விடுவது சிறப்பு தரும்.
செவ்வாய் ஹோரை
செவ்வாய் ஹோரையில் எந்த காரியங்கள் செய்தாலும் கவனமுடன் செய்ய வேண்டும். மேலும் செவ்வாய் ஹோரையில் புதிதாக காரியங்கள் தொடங்காமல் இருப்பது சிறப்பு. செவ்வாய் ஓரையை பொறுத்தவரை தெய்வீக விஷயங்களை செய்யலாம். வீட்டில் சண்டை சச்சர விஷயங்களை பற்றி பேசலாம். செவ்வாய் ஓரையில் நிலம் வாங்குவது, விற்பது, ஒப்பந்தம் போடுவது, சகோதர பங்காளி பிரச்சனைக்கு தீர்வு காண்பது, சொத்து பிரிப்பது, உயிர் எழுதுவது, ரத்த தானம் செய்வது, உறுப்பு தானம் செய்வது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற காரியங்கள் செய்வதற்கு உகந்ததாகும்.
இவ்வாறு ஒரு நாளின் சூரிய உதயத்தின் போது கிரக ஆட்சிகள் தொடங்குகின்றன ஏழு கிரகங்களும் நாள் முழுவதும் மாறி மாறி ஆட்சி செலுத்துகின்றன அவற்றை நாம் கணித்து செயல்படும் போது நமது வாழ்வில் பல வெற்றிகளை எளிதாக பெற முடியும்.
மேலும் படிக்க: