எளிமையான வீட்டு மருத்துவம்
நாம் உண்ணும் உணவை செரிமாணம் செய்ய இந்த உடலுக்கு சக்தி கொடுக்க உணவானது ஆற்றலாக மாற வேண்டும். நம் உடலில் ஏற்படும் ஒவ்வாமையைப் போக்கும். வயிற்றில் உணவை ஜீரணக்கவும், உடலில் ஏற்படும் உஷ்ணக் கோளாறுகளை போக்க இது உதவி செய்கிறது.
தீபாக்கினி சூரணம்” செய்முறை மற்றும் பயன்கள்.
தீபாக்கினி சூரணம் பயன்கள்.
- வயிற்று வலி
- வயிற்று எரிச்சல்
- உஷ்ண வாயுவால் உண்டான பேதி.
- ஜீரண கோளாறு.
தேவையான பொருள்கள்.
- சீரகம் 35 கிராம்
- திப்பிலி 35 கிராம்
- மிளகு 35 கிராம்
- இந்துப்பு 35 கிராம்
- பெருங்காயம் 18 கிராம்
- கருவேப்பிலை 18 கிராம்.
செய்முறை விளக்கம்.
பெருங்காயத்தை பொறிக்கவும்,
மற்ற அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுக்கவும். அனைத்தையும் இடித்து பொடியாக்கி மொத்தமாக ஒன்றாக கலக்கவும். இந்த கலவைக்கு பெயர்தான் தீபாக்கினி சூரணம்.
பயன்படுத்தும் முறை.
5 கிராம் தீபாக்கினி சூரணம் எடுத்து சூடான சாதத்தில் கலந்து கொஞ்சம் பசுவின் நெய் விட்டு பிசைந்து தினமும் ஒருமுறை அல்லது இரு முறை சாப்பிடலாம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
இது ஒரு சர்வ ரோக நிவாரணி. மேலே குறிப்பிட்டுள்ள நோய்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.