ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

சர்க்கரை நோய்க்கு வீட்டிலேயே எளிமையான உணவு

இன்றைய காலகட்டத்தில் வயது வரம்பின்றி அனைவரும் அவதிப்படுவது சர்க்கரை நோயால் தான். இந்த சர்க்கரை நோய்க்கு வீட்டிலேயே எளிமையாக உண்ணும் உணவினால் இதை கட்டுப்படுத்த முடியும்.

கற்றாழையின் வெளிப்புறத் தோலை நீக்கி உள்ளிருக்கும் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து குடித்து வர இரண்டாம் வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்து வையுங்கள். இந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலக்கி குடித்து வரலாம். வெந்தயக் கீரையை சாப்பிடுவதன் மூலமாக சர்க்கரை நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரான அளவில் இருப்பதற்கு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைப்பதற்கும், வெந்தயக்கீரை பயனுள்ளதாக இருக்கும். இலவங்கப்பட்டை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதனை உட்கொண்டு வர வேண்டும். தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவும். மரணத்தை தவிர மற்ற அத்தனை விதமான நோய்களுக்கும் இந்த கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகப் கூறுகின்றனர்.

கருஞ்சீரகத்தை அப்படியேவோ அல்லது பொடியாகவோ அரைத்து தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம். மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஒரு ஸ்பூன் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை வடி கட்டி அருந்தி வருவதால் தினமும் காலையில் குடித்து வருவதால் நீரிழிவுநோய் குறைந்து விடும்.

நாவல் பழங்களின் கொட்டைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கொட்டைகளை நன்கு காய வைத்து பொடியாக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை தினமும் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு பிறகு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *